என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 18 நவம்பர், 2010

ஜனாதிபதியின் பிறந்த தினம்; நாடு முழுவதும் வைபவங்கள் பதவியேற்பு நிகழ்வுக்கு விசேட ஏற்பாடுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டியும் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் மத வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையொட்டி உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தவிரவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.