சென்ற வாரம் மதுரையில் வழக்குரைஞர்கள் தமிழில் வாதாடினார்கள். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக தமிழில் வழக்காடல் நேற்று நடந்துள்ளது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த வாரம் வக்கீல்கள் தமிழில் வாதாடினார்கள். இதற்கு நீதிபதிகள் அனுமதி கொடுத்தத£ல் வக்கீல்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புதன், 31 மார்ச், 2010
காதல் ஜோடியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை
அந்த சாதியில், ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக கருதப்படுவது வழக்கம். எனவே, அவர்களின் காதலுக்கு பப்லியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று, சண்டிகாரில், 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடன் காதல் மலர்ந்தது எப்படி? சானியாமிர்சா பேட்டி
இந்தியாவில் இளம் டென்னிஸ் புயல் சானியா மிர்சா (23). இவர் தனது கவர்ச்சியான தோற்றம், சுறுசுறுப்பான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை சிறை பிடித்துள்ளார். இவருக்கும், குடும்ப நண்பர் சோரப் மிர்சாவுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 28-ந்தேதி
செவ்வாய், 30 மார்ச், 2010
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்
பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?
குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பெண் துறவி சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு
நாசிக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மலேகான் குண்டுவெடிப்பில் கைதான பெண் துறவி பிரக்யா சிங் மறுத்து வருகிறார். இதனால் அவருடைய உடல்நிலை மோசமாகி வருகிறது.மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் துறவி
நளினி விடுதலை மறுப்பு: அரசாணையின் முழு விவரம்
நளினியை விடுதலை செய்வது தொடர்பாக சிறை ஆலோசனைக் குழு வேலூர் சிறையில் ஜனவரி 20-ம் தேதி கூடி பரிசீலித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 18 பேர் கொலையுண்ட சம்பவத்தில், கொலையாளிகளுடன் நளினியும் இணைந்து சதியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அரசு தெரிவித்துள்ளது
துபாயில் 17 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை
பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்ததற்காக 17 இந்தியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கி துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது சார்ஜாவில் அல்&ஜாஜா என்ற பகுதியில் பல்வேறு நாட்டினர் தங்கும் தொழிலாளர் முகாம் ஒன்று உள்ளது. இங்கு சட்டத்திற்கு மாறாக மதுபானம் விற்பனை செய்ததில்
வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!! (அதிரடி நிருபரால் எடுக்கப்பட்ட மனதை உருக வைக்கும் புகைப்படங்கள் முழுமை
கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
திங்கள், 29 மார்ச், 2010
ஈபிஆர்எல்எப் வரதராஜப் பெருமாள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்
ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதராஜப் பெருமாள் இன்று இலங்கைக்கு சென்றுள்ளார். இந்தியாவில் இருந்து தனது கட்சியின் தேர்தல் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது. மனைவி, மாமன் ஆகியோர் சகிதம் அவர் பயணித்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது அதனுடன் கூடவே இந்தியாவை வந்தடைந்தார்.
மட்டு. மாநகர சபை உறுப்பினர்கள் நால்வர் அரசில் இணைவு..!!
மட்டு. மாநகர சபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் 4பேர் ஐ.ம.சு.முவில் இணைந்து கொண்டதுடன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அலிஸாஹிர் மெளலானாவை ஆதரிப்பதற்கும் தீர்மானித்துள்ளனர். இவர்களது இந்த தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவிய லாளர் சந்திப்பு அலிஸாஹிர் மெளலானா வின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்றது.
புதுவை இரத்தினதுரையின் விடுதலை:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கவிஞரின் சகோதரி சந்தித்து பேச்சு!
புலிகளின் கவிஞர் என கூறப்படும் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரின் சகோதரி ராசலட்சுமி தனது கணவன் பத்மநாதனுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சென்று சந்தித்து உரையாடினார். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி மற்றும் குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார்.
நுரைச்சோலை, சம்பூர் தவிர அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லையென அரசு முடிவு!
நுரைச்சோலை மற்றும் சம்பூர் அனல் மின் நிலையங்கள் தவிர வேறு அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூரிய, காற்று, உயிரியல்வாயு போன்று மாற்று முறைகள் மூலம் மின் உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவே இவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
அரசியல் யாப்பை அரசு முழுமையாக திருத்தாது
மஹிந்தயில் சிந்தனை உள்ளவை மட்டுமே திருத்தப்படும் - சம்பிக்க
அரசியல் யாப்பை அரசாங்கம் முழுமையாக திருத்தம் செய்யாது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மட்டுமே திருத்தப்படும். வெளிநாட்டு அழுத்தம் காரணமாக அரசாங்கம் யாப்பை முழுமையாக திருத்தப்போவதாக வும் இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும்
குவைத்தில் நிர்க்கதியான 70 இலங்கையர் இன்று நாடு திரும்புகின்றனர்
நோய்வாய்ப்பட்டோருக்கு விசேட சிகிச்சை
குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த 70 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்புவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகா மையாளர் எல். கே. றுகுணுகே நேற்று தினக ரனுக்குத் தெரிவித்தார்.கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடையும் இவர்கள்
மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார் - ஜனாதிபதி
நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது
காதலி போனியை மணக்கும் பிரகாஷ் ராஜ்
மனைவி லலிதகுமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனது நீண்ட நாள் காதலி போனி வர்மாவை திருமணம் செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிப் படங்களிலும் சிறந்த குணச்சித்திர வில்லன் நடிகராகத் திகழ்பவர் பிரகாஷ்ராஜ். காஞ்சீபுரம் படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
சச்சின் பேட்டில் அசத்திய ஹர்பஜன்
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் லீக் போட்டியில், சச்சினின் பேட்டைப் பயன்படுத்தி அதிரடியாக ரன் குவித்ததாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த போட்டிக்கு பின்னர் பேசிய ஹர்பஜன், “இன்றைய போட்டியில் நான் விளையாடப் பயன்படுத்தியது சச்சினின் பேட். அந்த பேட்டை நான் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததற்காக சச்சினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு : 40 பேர் பலி 18 படுகாயம்
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்று காலை 8 மணியளவில் தொடர்ச்சியாக இரு இடங்களில் குண்டு வெடித்தது. மாஸ்கோவின் சுரங்க ரயில்பாதையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டனர். 10 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றனர்.முதல் குண்டுவெடிப்பு மத்திய லுபியங்கா ரயில் நிலையத்தில் உள்ள ரயிலின் இரண்டாவது பெட்டியில் வெடித்தது. இதில் 25 பேர் இறந்தனர்
தென் கொரியா கப்பல் மூழ்கியது : 40 பேரை காணவில்லை
தென் கொரியா கப்பல் ஒன்று வட கொரியா அருகே மூழ்கி விட்டதாகவும், அதில் பயணித்த 40 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதற்றமான நிலை இருந்து வருகிறது.
சனி, 27 மார்ச், 2010
தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்
முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் ‘பல்லூடக பிரிவு’ - ஆணையர் நேற்று அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங் களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு
நித்தியானந்தருடான வீடியோ காட்சிக்கு நடிகை ரஞ்சிதா புதிய விளக்கம்
ஒரே நாள்! ஒரே ஒரு வீடியோ காட்சி... சுவாமி நித்யானந்தாவின் ஒட்டுமொத்த மரியாதையையும் தூக்கி உப்பரிகையில் ஏற்றிவிட்டது. நித்யானந்தாவையும் நடிகை ரஞ்சிதாவையும் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்க்க நேரிட்ட மக்கள் பதறிப்போனார்கள்.தமிழகத்தில் இதைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை என்ற நிலை.
முல்லை நகரிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பம்:வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி!
முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.
தொடர் தோல்விகளையும் சர்ச்சைகளையும் சந்திக்கும் பஞ்சாப் அணி
யுவராஜ் சிங் அடிக்கடி பொலிசுக்கு தெரியாமல் வெளியே சென்று விடுகிறார். ஒரு பொறுப்பான வீரராக அவர் நடந்து கொள்வது இல்லை. எங்களுக்கு இருக்கும் பிரச்சினையை அவர் புரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு விடயத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.யுவராஜ் சிங் செயல் குறித்து ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளதாக சண்டிகார் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் தனுஷ்!
ஒரு நாள் திடுதிப்பென்று பாரதிராஜாவிடமிருந்து அழைப்பு வந்ததாம் தனுஷுக்கு. அடுத்த சில நிமிடங்களில் ஜெமினி பார்ஸன் வளாகத்தில் ஆஜராகிவிட்டார் தனுஷ். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, ஒரு கதை இருக்கு கேக்கறீங்களா தனுஷ்? என பாரதிராஜா சம்பிரதாயமாக ஆரம்பிக்க, 'அய்யோ சார்... உங்க படத்தில் வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய விஷயம். கதையெல்லாம் கேட்க வேணாம்"
நித்துவும் சித்துவும் -தங்கபாண்டியன்
நம்மவர்களுக்கு எதைக்கண்டாலும் ஒரு மயக்கம் தான். ஒரு நடிகர் நல்லவர் வேடத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராகவே இருப்பார் என்று மயக்கம் கொள்வது. ஒருவர் ஏதோ ஒரு துறையில் திறமையானவராக இருந்தால், அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நன்றாகத் தெரியும் என மயக்கம் கொள்வது, ஒரு கிரிக்கெட் வீரரை நாட்டின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
