என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 17 ஜூலை, 2010

ஹாலிவுட் நடிகை மீது மோகம் கொண்டுள்ள உமர் பின்லேடன்

அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் உயிருடன் இருப்பதாக அவனது மகன் உமர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கு மூளையாக செயல்பட்டவன் பின்லேடன்.
அவன் உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அமெரிக்க படைகள் இதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அல்கய்தா செயல்படும் இடங்களில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் பின்லேடனின் முதல் மனைவி மூலம் பிறந்த உமர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

எனது தந்தை உயிருடன்தான் இருக்கிறார். உலகில் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை, அது ரகசியமாகவே இருக்கிறது. அவர் மீது அன்பாக இருக்கிறேன். இது சராசரி மனிதனுக்கே உரிய நிலைதான். அவரை நான் மிஸ் பண்ணுவதுடன், அமைதியான மனிதராக திரும்புவதை விரும்புகிறேன். எனக்கு லுயிசி பொல்லார்டு (வாடகை தாய்) மூலம் ஆண் குழந்தை பிறந்தால் எனது தந்தை ஒசாமாவின் பெயரை சூட்டுவேன். ஆனால் அவனை வருங்காலத்தில் அமைதியான, மரியாதைக்குரிய மனிதனாக வளர்ப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
நடிகையுடன் ஆசை:
ஹாலிவுட் நடிகை ட்ரூ பாரிமோருடன் பழக விரும்புவதாக, உமர் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியில் ‘‘ஹாலிவுட் நட்சத்திரமான பாரிமோர் மிகவும் அழகானவர். அவரது அழகை கண்டு பிரமித்துள்ளேன். ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகையான பாரிமோரை தனியாக சந்திக்க விரும்புகிறேன் என்றார் அவர்