கடன் அட்டை மோசடி மன்னர்களில் ஒருவரான இலங்கைத் தமிழ் இளைஞன் (வயது-30) ஒருவர் பிரித்தானியாவில் இண்டர்போல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வேயில் கடந்த இரு வருடங்களாக இடம்பெற்று வந்த ஏராளமான கடன் அட்டை மோசடிகளின் சூத்திரதாரி இவரே என்று நம்பப்படுகின்றது.
இவரது வழிகாட்டலில் பல நாடுகளிலும் கடனட்டை மோசடிக் கும்பல்கள் இயங்கி வந்துள்ளன. நோர்வேயில் மட்டுமன்றி பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவரும், இவரது சகாக்களும் கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளார்கள்.
நோர்வே பொலிஸார் கடந்த ஒரு வருட காலமாக இம்மோசடிக் கும்பலை வலை விரித்துத் தேடி இருக்கின்றார்கள். இவரது சகாக்கள் இருவர் நோர்வேயில் பிடிபட்டமையைத் தொடர்ந்தே இவருக்கு ஆப்பு வைக்கப்பட்டது.
நோர்வேயில் கடனட்டை மோசடிகள் மூலம் வங்கிக் கொள்ளைகள் ஐந்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்றும் 150,000 குரோம் வரை மோசடி செய்திருக்கின்றார்கள் என்றும் அந்நாட்டுப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளார்கள்.
இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பூரண தகவல்களைப் பெறுகின்றமைக்காக இண்டபோல் பொலிஸாரும், நோர்வே பொலிஸாரும் இணைந்து தீவிர புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
|