தோழியே எனக்குள் நீ
உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்...................
மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு......................
கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள்
தண்டனை காதல்........................
ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...............
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள் என் இதயம்.................