என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 19 ஜூன், 2010

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு ஆப்பு!

ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து முதல் பாகம், இரண்டாம் பாகம் என பல பாகங்களை ஒளிபரப்புவதை விஜய் டிவி தனது கொள்கையாகவே வைத்திருக்கிறது.இதில் ஏர்டெல் சூப்பர் சிங்கர், கதையல்ல நிஜம் என பல நிகழ்ச்சிகள் அடங்கும். இப்போது ஜோடி நம்பர் ஒன்நிகழ்ச்சியையும் அடுத்த பாகத்தைத் துவக்கிவிட்டது விஜய் டிவி. ஆனால் இங்குதான் பிரச்சனையே. ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் என்று சொல்லும் இந்த நிகழ்ச்சியில் பதினைத்து வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.
இந்த நிகழ்சியை துவக்கிய அன்றே சிறுவர்களையும் சிறுமிகளையும் கூப்பிட்டு ஜோடி போட்டு ஆட வைத்தார்கள். இது போதாது என்று கெமிஸ்ட்ரிபற்றி அவர்களுக்கே பாடம் எடுத்தார்கள். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு இப்போது பலதரப்பட்டவர்களிடம் இருந்து எதிர்ப்பு அலை உருவாகிக் கொண்டிருக்கிறது. விரைவில் விஜய் டிவிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.