திரையுலகில் ரஜினியை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ், என்கிறார் இயகத்குநர் ஷங்கர்.இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
"அப்படியா பேசிக்கிறாங்க... குட்!
'டெர்மினேட்டர்', 'அவதார்' படங்களில் வேலை பார்த்தவர்கள் 'எந்திரன்' படத்துக்கு வேலை பார்த்திருக்காங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
இவ்வளவு நாளாகுதேன்னு சில பேர் கேட்கலாம். அவ்வளவு காரணங்கள் இருக்கு. நிறைய மெனக்கெடல் இருக்கு. ஒரு ரோபோ திடீர்னு மனிதனாக உருமாறி வெளியே மனிதக் கூட்டத்தில் திரிகிற விஷயம். ஏகப்பட்ட டெக்னாலஜி கலந்திருக்கு.
இந்த அளவுக்குத்தான் ஒரு படம் இருக்கும்னு நினைச்சு வந்தால், அதுக்குப் பல படிகள் மேலே போயிருக்கோம். இதுவரைக்கும் நீங்க பார்க்காத புதுசு. கதையைப்பத்தி டீடெயிலாப் பேசலாம்தான். ஆனா, எங்க எல்லோருக்குமே, நான் படத்தின் டைரக்டராகவே இருந்தாலும்... இவ்வளவுதான் அனுமதி!"
எப்படி இருக்கார் ரஜினி?
"ரஜினி ரொம்ப அபூர்வம். புகழ், பணம், அந்தஸ்து அதெல்லாம் இல்லை விஷயம். எப்பவுமே அவர்கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியைப் பார்த்துட்டே வர்றேன். அதுதான் நான் தேடுறதும்!
நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கிறதுதான் பெரிய சவால். ரஜினி அந்தச் சவாலில் ஜெயிச்சவர். அவர்கிட்டே மாறாத விஷயம், நடிப்பு மேல் இருக்கிற துடிப்பு. கமல், விக்ரம்தான் இப்படி கெட்டப் மாற்றம்னு முன்னணியில் நிற்பாங்க. அது அவங்களுக்குக் கைவந்தது. இதில் ரஜினியும் அப்படி மாறிட்டார். நாலு மணி நேரமா, ஆறு மணி நேரமா அசையாமல் உட்கார்ந்து மேக்கப் போட்டாலும் செய்றார். டப்பிங் பேசிட்டுக் கிளம்பினதும் போன்ல, 'ஷங்கர்... அருமை அருமை'ன்னு சொல்வார். மாலையில் இன்னொரு போனில் 'மணிமணியா இருக்கு'ன்னு ஆசையாச் சொல்வார். அவரை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ்!"
"கமல் 2000-ல் இந்தப் படத்தில் நடிக்கிற மாதிரி இருந்தது. அவருக்கு ஏத்த மாதிரி கதையில் அவசியமான எல்லா விஷயங்களும் செய்தும், அது நடைமுறைக்கு வரலை. அடுத்து, ஷாரூக். அதுவும் ஏனோ டேக் ஆஃப் ஆகலை. ஆனால், எல்லாம் நல்லதுக்குத்தான். 'எந்திரன்' ரொம்ப நல்லா வரணும்னு என்னைவிட அக்கறைப்படுபவர் ஒருத்தர் இருக்கார். அவர்தான் ரஜினி!" "ஏன் இன்னும் விஜய், சூர்யான்னு ரெண்டு பேரும் உங்க கண்ணிலேயே படலை?"
"நான் கதையை வெச்சுக்கிட்டு ஹீரோவைத் தேடுகிற ஆளு. எடுக்கப்போற கதைக்கு அவங்க ரெண்டு பேரும் பொருத்தம்னா, அவங்ககிட்ட கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. நிச்சயம் அவங்க ரெண்டு பேரும் என் படங்களில் நடிக்கிற காலங்கள் இருக்கு!"