ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
சிலி பூகம்ப பலி 700-ஐ தாண்டியது
சாண்டியாகோ மார்ச்.1 (டிஎன்எஸ்) தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று முன்தினம் 8.8 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் சான்டியாகோ மற்றும் கன்செப்ஷன் உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதில் ஏராளமானபேர் பலியாகினர்.
சிலியில் பயங்கர பூகம்பம்! பேரழிவாக அறிவிப்பு! : 300 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கடற்கரை நாடான சிலியை இன்று தாக்கிய பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது. சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.(படங்களுடன்) |
வியாழன், 25 பிப்ரவரி, 2010
சினிமாவே வேண்டாம்... அரசியலுக்கு வரட்டா?! தியேட்டருக்கு வெளியே பட்டையைக் கிளப்பி வருகிறது அஜீத் சினிமா
![]() |
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

முன்னதாக சவுந்தர்யா கடந்த ஓராண்டாக அஸ்வினை எனக்கு தெரியும். என்று கூறினார். மேலும் "எனது பெற்றோரும், அஸ்வினின் பெற்றோரும் குடும்ப நண்பர்கள்.
எனது காதலை பற்றி சொன்னதும் அப்பா சம்மதம் தெரிவித்தார். அதனால் இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் எனலாம். அஸ்வினை தேர்ந்தெடுத்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன் (படங்களுடன்)
திங்கள், 22 பிப்ரவரி, 2010
இலங்கையின் மூத்த கலைஞர் சிறீதர் பிச்சையப்பா காலமானார்
இலங்கையின் பிரபல இசை, நடன கலைஞர் சிறீதர் பிச்சையப்பா, சுகயீனம் காரணமாக தனது 47 வது வயதில் நேற்று காலமானார்.
1963 ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ம் திகதி பிறந்த இவர், நாடக கலைஞர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எழுத்தாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஓவியர் என பல்வேறு பரிமாணங்களில், தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்.
1986 ம் ஆண்டு தனது பாரியார் நிலாமதியுடன் டென்மார்க்கில் நடைபெற்ற இசை நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டு, உலகம் முழுக்க பிரபல்யமானார்.
இவருடன், மேஜர் சுந்தரராஜன், பீ.எஸ்.அப்துல் ஹமீட், மரிக்கார் ராம்தாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், பாடகர் கே.எஸ்.பாலச்சந்திரன், எஸ்.கே.ராஜன் ஆகியோர் இணைந்து நடத்திய அந்நிகழ்வு, இலங்கை தமிழ்க்கலைஞர்கள் வெளிநாடுகளில் நடத்திய மாபெரும் கலைநிகழ்வுகளில் ஒன்றாக சாதனை படைத்திருந்தது
சனி, 20 பிப்ரவரி, 2010
அசல் விமர்சனம்
தம்பியை காப்பாற்ற கிளம்பும் அண்ணன் அதே தம்பியை போட்டு தள்ளுவதுதான் நாட். ஆறிப்போன ரசத்தை அல்ட்ரா மாடர்ன் கிளாசில் ஊற்றி தந்த மாதிரி காஸ்ட்லி மேக்கிங். இதே 'நாட்' கே.எஸ்.ரவிக்குமாரிடம் கிடைத்திருந்தால், காணாபோனான் பட்டியை தாண்டாமலே கதையை முடித்திருப்பார். இதிலோ பாரீஸ் நகரத்தை காட்டி பளபளக்க வைத்திருக்கிறார்கள். பாரீஸ் டவர் உயரத்திற்கு ஸ்கோர் பண்ணியிருக்கிறார் தல. அதுவும் அப்பா பிள்ளை என்று டபுள் ஷாட்!
மகா சிவராத்திரி விரத முறைகள்
சிவராத்திரி அன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்
புகழ்ச்சி ஒரு மந்திரம், புகழ்ச்சிக்கு அடிமையாகாதவர் புவியில் யாருமில்லை. ஒருவரை ஆத்மார்த்தமாகப் பாராட்டும் போது அவரின் அகமும் குளிரும். முகமும் மலரும்.
காலையில் கணவர் வேலைக்குச் செல்லக் கிளம்பும் போது வழியனுப்ப ஆசையாக வந்து நிற்கும் மனைவியைப் பார்த்து,'என்னடீ ஈனு பல்லைக் காட்டிக்கிட்டு நிக்கிறே, வழி விடு' என்று எரிந்து விழும் கணவர் சாதாரண(சதா ரண)ரகம். இதே,"உன் முகத்தைப் பார்த்துட்டுப் போனா எல்லாக் காரியமும் சக்ஸஸ் தான்,

வியாழன், 18 பிப்ரவரி, 2010
சர்வதேச கார் பந்தயம் : நடிகர் அஜீத் பங்கேற்பு
எம்.ஆர்.எப். சர்வதேச கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் 3-வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இன்று நடந்தது.முதல் போட்டியாக 115 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது.
அதைத் தொடர்ந்து எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயம் நடந்தது.
இதில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கார்பந்தயத்தில் கலந்து கொள்வதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
பந்தயம் 15 ரவுண்டுகளை கொண்டது. ஆனால் அஜீத்குமார் சென்ற கார் முதல் ரவுண்டிலேயே பழுதாகி நின்று விட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத் துடன் கூச்சல் போட்டனர்.
அந்த பந்தயம் முடிந்தபிறகு அஜீத் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ? மணி நேரம் போட்டி நடைபெறுவது பாதிக்கப்பட்டது.
மாலையில் நடைபெறும் எம்.ஆர்.எப். பார்முலா 1600 பந்தயத்தில் (15 ரவுண்டு) கலந்து கொள்ளப் போவதாக அஜீத்குமார் அறிவித்தார்.
காலையில் நடந்த எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயத்தில் சென்னை வீரர் அஸ்வின் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த உட்டன் 2-வது இடத்தையும், பார்த்திவா கமரஸ்வரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

பேஸ்புக்குக்கும்,ட்விட்டர்கும் சவாலாக கூகுள் வண்டு (Buzz)
தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz)
முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான்.
மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.
இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது \'Buzz\' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.
உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம்.
இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உயிர்காத்த வெப்கேம் காட்சி
ஜெர்மனியின் வடக்கு பகுதியில் செயின்ட் பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது. கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான் கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது. இங்குள்ள ரிசார்ட்டுகளில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை கண்டு களிப்பது கண்கொள்ள காட்சியாக புகழப்படுகிறது.
இதற்காகவே வந்து குவியும் சுற்றுலா பயணிகள் உள்ளனர். சூர்ய அஸ்தமனம் அற்புதமானது என்றாலும் கொஞ்சம் ஆபத்தானது.சூரியன் மறையும் நேரம் நெருங்கியதுமே கடற்கரையின் குணமே மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
திடிரென இருள் சூழ்ந்து கடற்கரையே கண்ணுக்கு புலப்படாமல் போய்விடுமாம். அதிலும் கடற்கரை பனியில் உறையத்துவங்குவதால் நிலமை மேலும் சிக்கலாகி விடுமாம்.
எனவே சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களில் கடற்கரையில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவதும் உண்டு.
ஆனால் சூர்ய அஸ்தமன அழகால் உந்திதள்ளப்படும் பலர் ஆபத்தை பொருட்பாடுத்தாமல் கடற்கரையிலேயே காத்திருப்பதும் உண்டு.
இப்படிதான சமீபத்தில் 40 வயது மனிதர் ஒருவர் சூர்ய அஸ்தமனத்தை ப்டம் எடுப்பதற்காக காமிராவோடு காத்திருந்தார்.
அந்த அற்புத காட்சியை கிளிக் செய்துவிட்டாலும் அதன் பிறகு உரைந்து கிடந்த பனிக்கட்டி மீது சிக்கி கொண்டார். அங்கிருந்த பார்த்தால் கடற்கரை கண்ணில் படவே இல்லை.பதறிப்போன மனிதர் உதவிக்கு தவித்திருக்கிறார். ஆனால் அருகாமையில் யாருமே இல்லாத்தால் மேலும் தவித்து கடைசியில் தனது காமிராவை கொண்டு பிளாஷ் அடித்து உதவிக்கு செய்கை செய்துள்ளார்.
வெளிச்சம் மங்கத்துவங்கி விட்ட ஆளற்ற கடற்கரையில் உயிருக்கு போராடும் ஒருவர் காமிராவில் பிளாஷ் அடிக்கும் காட்சி எப்படி இருந்திருக்கும் நினைத்துப்பாருங்கள். அவரது அபயக்குரல் யார் காதிலும் விழாமலேயே போயிருக்கும்.
ஆனால் நல்ல வேளையாக பெண்மணி ஒருவர் தனது வீட்டில் அமர்ந்த படி கம்ப்யூட்டர் மூலம் அந்த சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு களித்துக்கொண்டிருந்தார். நகர நிர்வாகம் வெப்கேம் மூலம் கடற்கரை காட்சியை பதிவு செய்து இண்ட்நெர்நெட் வழியே கணச்செய்து வருகிறது.
சூர்ய அஸ்தமன அழகில் மூழ்கியிருந்த அந்த பெண்மணி காமிரா பிளாஷ் வெளிச்சம் மீன்னுவதை பார்த்து யாரோ அபயக்குரல் கொடுப்பதை புரிந்து கொண்டு உடனே அதிகாரிகளூக்கு தகவல் கொடுத்தார்.
அதிகாரிகளும் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.

புதன், 17 பிப்ரவரி, 2010
சிறுகதை : 2060 தேர்தல்
நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம் பிரியம் காட்டுவான். worldmovies கோப்பில் பழைய தமிழ் படங்களை பார்த்துவிட்டு எனக்கே தெரியாத விஷயங்களை அலசுவான். சிலநேரம் எரிச்சலூட்டுமளவுக்கு கேள்வி கேட்பான். தியாகராஜ பாகவதர் என்கிற யாரோ ஒரு பழம் பெரும் நடிகர், இவனுக்கு அவர்மேல் உயிர். என் தாத்தா அவரைப்பற்றி சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். இவன் நக்கலாய் பேசுகிறானா இல்லை உண்மையிலேயே புகழ்கிறானா என பலமுறை சந்தேகித்திருக்கிறேன்.
அவனே என்னை அழைத்தான்,"வணக்கம் செந்தமிழ், நலமா?".
அவன் ஆங்கிலத்தில் கேட்பதை தமிழில் மொழிமாற்றியது என் 'இன்டர்ப்ரெட்டர்-VII'.
"நலம் லாங்டன், நீ எப்படி?".
"பெரிதாய் ஒன்றுமில்லை." சலித்துக்கொண்டான்.
"2021ல் முடிந்த மின்னணு புரட்சி பற்றி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாயே முடிந்துவிட்டதா?"
"நீதித்துறையில் மின்னணு இயந்திரங்கள் எப்படி குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடித்து தண்டிக்கின்றன என்பதை படித்துக்கொண்டிருக்கிறேன்."
"ஓ... ஜஸ்டிஸ்-IV-U. வடிவமைத்தது இந்தியர்தான் தெரியுமா?"
"ம். தெரியும். முன்பெல்லாம் பொய்சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கத்தான் இயந்திரம் பயன்பட்டதாம், ஆனா 'ஜஸ்டிஸ்' குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா இல்லையா என துல்லியமாக சொல்லிவிடும்."
"மூளையை ஏதோ நாவல் படிப்பது போல படித்துவிடும் திறன் இருக்குதே சும்மாவா?".
"சரி உங்கள் ஊரில் தேர்தல் எனக் கேள்விப்பட்டேன். துளசி சொன்னாள்."
"ஆமாம்."
"எங்கள் ஊர்போல தானியங்கும் அரசாங்கம்தானா அங்கேயும்?"
"அவ்வளவுதூரம் மனிதர்களை நாங்கள் மறந்துவிடவில்லை லாங்டன்.", சிரித்தான்,"எங்கள் ஊரில் இன்னும் மக்களாட்சிதான்."
"அப்படீன்னா ஓட்டுப்போடும் முறையா? இந்த பழைய முறைகளெல்லாம் ஒழிந்துவிட்டது என நினைத்தேன். வல்லரசு இந்தியா, அங்கே இன்னும் இந்த முறைகள் இருப்பது ஆச்சரியம்."
இன்டர்ப்ரெட்டரில் காசுவல் மோட் (Casual Mode) தட்டி அளவை அதிகரித்தேன், தூயதமிழில் விவாதிக்க இது ஒன்றும் இலக்கியமில்லையே.
"லாங்டன், உங்கள் ஊரில் 90% எந்திரங்கள் ஆட்சி பொறுப்பிலுள்ளன இங்கே 30% என வைக்கலாம். முழுமையாக எந்திர ஆட்சி இன்னும் இங்கே சாத்தியமாகவில்லை. பழமைவாதம் இந்தியாவில் மலிவான பொருள். உனக்கே தெரியும் சாதியை ஒழிப்பதற்கு நாங்கள் பட்டபாடு."
"போனமாதம் அதைப்பத்தி சொன்ன நியாபகமிருக்கு. சரி இப்போ 70% ஆட்சியாளர்கள எப்படி, ஓட்டுப்போட்டா தேர்ந்தெடுக்கிறீங்க?"
காசுவல் மோட் செட்டிங் சரியில்லை இன்னும் அவன் பேசுவது என் பேர்போல 'செந்தமிழாய்' ஒலித்தது.
"இல்ல லாங்டன் ஓட்டெல்லாம் இல்ல. 2023 ல, மின்னணு புரட்சிக்குப்பின்னால அரசு அலுவல்கள் பலவும் கணிணிகள் செய்ய ஆரம்பித்தன. இதில் பல ரோபோக்களும்.
ஒரு கணிணி முன்னால போய் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது பதிவு செய்யலாம், சட்ட ஒழுங்கு முழுவதும் கணிணிமயம். சூப்பர் ஜி.பி.எஸ் வந்தபிறகு டிராபிக் முதல் திருட்டுவரை எல்லாமே செயற்கைகோள் கண்காணிப்பில் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
வரவு செலவு திட்டமெல்லாம் கணிணிகளே தீட்டுகின்றன. இந்தவருடம் மழை எப்படியிருக்கும், விளைச்சல் எப்படி வரும் என்பதும், ஏற்றுமதி இறக்குமதி வியாபார எதிர்பார்ப்புக்கள் எளிதில் கணக்கிடப்படுகின்ற. இதனால் கணிணி போடும் பட்ஜட்டில் குறைந்த அளவே துண்டு விளுகிறது.
அரசாங்கத்திலிருக்கும் மனிதர்கள் கணிணிக்குத் தேவையான மென்பொருள் திருத்தங்கள் மற்றும் மேன்பாடுகளை அலசுகிறார்கள். தொகுதி முன்னேற்றத்தை பார்வையிடுவதும், புதிய சட்டங்கள் கொண்டுவருவதும்தான் இவர்களின் சில பொறுப்புக்கள்."
"செந்தமிழ், எங்கள் ஊரிலிருந்த பழைய அமைப்புத்தானே அது. ஆனால் தேர்தல் எப்படி நடக்குதுன்னு சொல்லேன்."
"ஓ...தேர்தல் என்று பெரிதாய் ஒன்றுமில்லை அந்தந்த தொகுதிக்கு யார் சிறந்த பிரதிநிதி என்பதை கணிணியே தேர்வு செய்கிறது. எல்லோரின் தகுதியும் திறனும் மதிப்பிடுமளவுக்கு நம்மை பற்றிய செய்திகளை கணிணியில் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஊரில் இது பழைய தொழில்நுட்பம்."
"நல்ல யுக்தி. கணிணியே தேர்ந்தெடுப்பது அருமை."
"லாங்டன், மின்னணு மயமான இயந்திர வாழ்க்கையில் எளிதில் விரக்தியாகிவிடுகிறது. மூன்று வருடம் வேலை இல்லாமல் அரசு தரும் காசில் உயிர்வாழ்கிறேன். உனக்குத் தெரியுமே."
"ம்..."
"தற்கொலை செய்யலாம் என்றிருக்கிறேன்."
"என்ன...ஏய் என்ன சொல்ற."
"கடைசியா நாயர் டீகடை சாட் ரூம் வந்து நண்பர்களிடம் விடைபெறலாமென வந்தேன். நீ மட்டும்தான் கிடைத்தாய். கேத்தி மற்றும் சில்வியாவிடம் சொல்லிவிடு. வருகிறேன்"
லாங்டன் சப்தமாய் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாட்ரூமிலிருந்து வெளியேறினேன். வாங்கிவைத்திருந்த மூளைக் கொல்லி (Brain Killer) பாட்டிலை கையிலெடுத்தேன். எந்த வருத்தமுமில்லை. வாயருகே கொண்டு சென்றேன்.
"பீப்...பீப்"
சாகப்போகும் நேரம் கை கணிணியில் செய்தி. தானாகவே வாசித்தது.
"வணக்கம் செந்தமிழ் செல்வராஜ். வாழ்த்துக்கள் நீங்கள் இந்தமுறை கல்வி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் விவரங்களை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்"
கையில் வெறுமையான விஷக் குப்பியை பார்த்தேன், சிரிப்புத்தான் வந்தது.
தேர்தல் |

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)