
முன்னதாக சவுந்தர்யா கடந்த ஓராண்டாக அஸ்வினை எனக்கு தெரியும். என்று கூறினார். மேலும் "எனது பெற்றோரும், அஸ்வினின் பெற்றோரும் குடும்ப நண்பர்கள்.
எனது காதலை பற்றி சொன்னதும் அப்பா சம்மதம் தெரிவித்தார். அதனால் இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் எனலாம். அஸ்வினை தேர்ந்தெடுத்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன் (படங்களுடன்)
நான் சினிமாவில் இருப்பதால் இதே துறையை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கும் விருப்பம் எப்போதும் இருந்ததில்லை. அதே நேரம், எனது பணியை அஸ்வின் மதிக்கிறார்.
திருமணத்துக்கு பின் நாங்கள் சென்னையில்தான் இருக்கப்போகிறோம். அவரது பிசினஸும் இங்கேதான். எனது பட நிறுவன வேலைகளும் இங்கேதான்.
திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த ஆண்டில்தான் திருமணம் இருக்கும். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.








