என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம்

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோசெப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் மற்றும் முதலீட்டாளர் வொரன் புபே ஆகியோரினால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 38 செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் அரைவாசியை அறக்கட்டளைகளுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
சட்ட ரீதியாக எந்தவொரு ஆவணத்திலும் குறித்த செல்வந்தர்கள் ஒப்பந்தமிடவில்லை என்ற போதிலும், 50 வீதமான சொத்துக்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
நியூயோர்க் நகர மேயர் மைக்கல் புலும்பேர்க், சீ.என்.என். செய்தி சேவையின் ஸ்தாபகர் டெட் டெர்னர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த அறப்பணிகளுக்கு உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
உயிருடன் இருக்கும் காலத்தில் அல்லது உயிரிழந்ததன் பின்னர் தமது சொத்துக்களில் அரைவாசியை அறக்கட்டளைகளுக்காக ஒதுக்க வேண்டும் என்ற திட்டமொன்றை பில் கேட்ஸூம், வொரென் புபேயும் ஆரம்பித்துள்ளனர்.
கல்வி நடவடிக்கைகளுக்காக கூடுதலான பணத்தை செலவிடத் தயார் என சில செல்வந்தர்கள் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 403 பேர் பில்லியன்களுக்கு அதிபதிகளாக காணப்படுவதாகவும் அவர்களிடம் அறக்கட்டளைகளுக்காக ஒத்துழைப்பு திரட்டும் பணி ஆரம்பிக்கப்படும் எனவும் பில் கேட்ஸ் மற்றம் வொரல் புபே ஆகியோர் தெரிவித்துள்ளனர்