என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அப்புறம் இவர்தான்- ஓர் அலசல்


இன்றைய தேதியில்அதிகமான சினிமா பார்க்கும் மக்கள் பயன்படுத்தப்படும் சினிமா வசனங்கள் வடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனமாகவே இருக்கிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் பின்னர் ரஜினி பட வசனங்களையும் (பஞ்ச்) அதிகமானவர்கள் பேச்சுக்களுக்கு நடுவே சாதரணாமாக உபயோகப்படுத்தி வந்தனர்.ஆனால் இன்றைய நிலையில் மூன்றுவயது குழந்தை முதல் எண்பது வயது கிழம் வரைக்கும், மூடை சுமக்கும் தொழிலாளியில் இருந்து முதலாளிகள் வரைக்கும், ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரைக்கும் எல்லோரும் பயன்படுத்தும் சினிமா வசனங்கள் அதிகமாக வடிவேலு பயன்படுத்தியதாகவே இருக்கின்றது, பதிவுலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. 



ஆரம்பகாலங்களில் கவுண்டரின் கால்களுக்குள் மிதிபடும் பாத்திரங்களை இருக்கும்போதும் சரி, பின்னர் குழுவாக காமடி பண்ணும்போதும் சரி, அதன் பின்னர் நாயகனின் நண்பனாக வரும்போதும் சரி வடிவேலு சிரிக்க வைத்தாலும் இப்படி சினிமா ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் இன்றைய வடிவேலுவின் தாக்கங்கள் 'வின்னரில்' இருந்துதான் ஏற்பட்டதென்று நினைக்கிறேன் வின்னருக்கு பின்னர் கிரி, தலைநகரம் , மருதமலை,இம்சை அரசன், போக்கிரி போன்ற படங்களே வடிவேலுவின் வசனங்களை அதிகமாக பலரும் பேசும்படி வைத்தது. ஆனால் வடிவேலுவின் சுந்தர்.c , சுறாச் போன்றோருடனான பகைமையால் மேற்குறிப்பிட்ட படங்களுக்கு பின்னர் முழுமயான நகைச்சுவை படம் எதுவும் வடிவேலுவுக்கு அமையாவிட்டாலும் அவ்வப்போது ஏதாவதொரு படத்தில் வடிவேல் பேசும் வசனம் பிரபால்யம் ஆகிவிடுகிறது. இவற்றையும் தாண்டி இப்போதெல்லாம் வடிவேலுவுடன் படத்தில் பேசும் சக நடிகர்களின் வசனங்களும் பிரபல்யமாகிவிடுகின்றன. 



இதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள்தான், காமடிக்கென்று இரண்டு முக்கிய சானல்கள், பாட்டு சானல்களில் இரவு ஒன்பது மணிக்கப்புறம் காமடிக்காட்சிகள், இவற்றைதவிர ஏனைய தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது காமடிக்காட்சிகள் ஒளிபரப்படுகின்றன. அதுவும் குறிப்பிட்ட படங்களில் இருந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுவதால் அது தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் மனதில் தானாகவே பதிந்துவிடுகிறது . இதனால் பேச்சுக்களுக்கிடையில் காமடியாக இந்த வசனங்கள் ஒரு flow வில் தானாக வருகின்றன.. நேரடியாக பதில் கூற முடியாத விடயத்தை சமாளிக்கவும் இந்த வடிவேலு வசனங்கள் உதவுகின்றன. அதேபோல யாரவது கிண்டல் பண்ணும்போதும் அதிலிருந்து தப்பிக்கவும் பதிலுக்கு போட்டுத்தாக்கவும் வடிவேலு வசனங்கள் உதவுகின்றன, இது உண்மையில் ஒரு ஆரோக்கியமான விடயமாகவே தெரிகிறது. 

அதிகமாகனவர்கள் பேசும் வடிவேலுமற்றும் வடிவேலுவிடம்பேசுவோரின் வசனங்கள் 



"முடியல,"
"சப்பா இப்பவே கண்ணை கட்டுதே "
"என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?"
"நான்   அப்படியே ஷாக்  ஆயிட்டேன் !!
"வடை போச்சே "
"தம்பி டீ இன்னும் வரல " 
" நான்... என்னை சொன்னன் "
"வரும்.. ஆனா வராது "
"அவளவு சத்தமாவா..... கேக்குது "
"ஆஹா  ஒரு  குருப்ப  தான்ய  அலையுராங்காய  "
"ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசிறன் "
"நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது "
" மணிக் கொரு தடவை  மங்குனி அமைச்சர்  என்று   நிரூபிக்கீரீர்  !!! ."
 என்  இனமடா நீ !!  "
"க க க போ......"
"ஆணியே  புடுங்க வேண்டாம் " 
" பட் எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்துது  " (அதாங்க பட் எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கின்னு புதுசா வந்திருக்கு ) 
"எவ்ளவு அடிச்சாலும் தாங்கிரானே இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லீற்ராண்டா "
"மாப்பு வச்சிண்டான்ரா ஆப்பு " 
"அவ்வவ்வ்வ்வ்.... " 
"என்னா வில்லத்தனம் "
"அது போன மாசம் "
"வேனாம் வலிக்குது "
"அத.. சிலவு பண்ன்ணீ ற்றன்..... "
"கிளம்பீட்டாங்கையா  கிளம்பீட்டான்   " 
"Building  storngku  basement weakku"
" why  blood ? same blood" 




இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நான் தவறவிட்டவற்றை (அதிகம் உள்ளது ) பின்னூட்டலில் கூறுங்கள். 

இதுதவிர வடிவேலின் சில பிரபல்யமான பாத்திரங்களின் பெயர்கள் 

கைப்பிள்ளை, வருத்தப்படாத வாலிபர்சங்கம்(இது வடிவேல் சார்ந்த ஒரு குழுப்பெயர் ) , சினேக்பாபு , வண்டு முருகன், வெடிமுத்து , நாய் சேகர், தீப்பொறி திருமுகம், சொங்கி மங்கி(Body சோடா ).....   இவ்வளவு தான் உடன ஞாபகத்துக்கு வந்தித்து, உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டலில் சொல்லுங்க....

"கையோ!! கையோ !! முடியல.....  முட்டிகிட்டு   நிக்கிது "