என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 16 செப்டம்பர், 2010

மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் பயன்படுத்துவதால் சாதகமான மருத்துவ பயன் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சி வெளிவந்துள்ளது. டீன்ஏஜ் மனஅழுத்த நோயாளிகள், இன்டர்நெட் பார்ப்பதால் குணமாகலாம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இன்டர்நெட் செல்ப் ஹெல்ப் பார் டெப்ரஷன்என்ற தலைப்பில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய பேராசிரியர் சுவனா சேத்தி ஆய்வு நடத்தினார்.
மனஅழுத்தம் கொண்ட டீன்ஏஜ் வயதினரை தேர்வு செய்து, இன்டர்நெட்டில் மனநலம் குறித்த தகவல் பரிமாற்ற இணைய தளங்களை பார்த்து வர செய்தார்.
இணைய தளங்களில் மனஅழுத்தத்துக்கு மருத்துவ நிபுணர்களின் கலந்துரையாடல், சிகிச்சை ஆலோசனைகள் பெற்ற டீன்ஏஜ் வயதினர், பாரம்பரிய சிகிச்சை பெற்றவர்களைவிட வேகமாக குணமானது தெரிய வந்தது.
டாக்டரிடம் நேரில் மனஅழுத்த பாதிப்புகளை விளக்குவதை விட ஆன்லைன் ஆலோசனை தளங்களில் பதிவு செய்வது துல்லியமாக இருப்பதால், நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகளால் மனஅழுத்தம் வேகமாக குறைகிறது.
டாக்டர்களில் நேரில் ஆலோசனை பெறச் செல்லும் இளைஞர்கள் பல விஷயங்களை தெரிவிக்க மறந்து விடுகின்றனர். இதனால், சிகிச்சை சரியாக அமையாமல் பிரச்னை நீடிக்கிறது என்கிறார் டாக்டர் சுவனா சேத்தி