என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 3 ஏப்ரல், 2010

மோசடி மந்திரவாதி பிரிட்டனில் கைது : 18 மாத சிறை

பிரிட்டனில் வசிக்கும் மந்திரவாதி, பல்வேறு குறைகளை தீர்ப்பதாக கூறி பக்தர்களிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின் செஷயர் பகுதியை சேர்ந்தவர் நீம் முகமது. குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தி தருவது முதல், காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருவது வரை, எல்லாம் மந்திரத்தால் சாதிக்க முடியும், என கூறி பத்திரிகைகளில் ஏராளமான விளம்பரம் கொடுத்து வந்தார்.

இந்த விளம்பரத்தை பார்த்து, பலர் இவரிடம் தங்கள் குறைகளை போக்கி கொள்ள வந்தனர். பிரச்னைகளுக்கு ஏற்ப பரிகாரம் செய்ய வேண்டும், என கூறி தன்னிடம் வந்த பக்தர்களிடம் ஆயிரம் முதல் லட்சக்கணக்கான பணத்தை வசூலித்துள்ளார்.ஆனால், யாரும் பலன் அடைந்ததாக தெரியவில்லை.
இதுவரை அவர் பல பக்தர்களிடம் ஆறு கோடி ரூபாய் வரை மோசடி செய்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள், வால்வர்ஹாம்டன் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜொனாதன் கோஸ்லிங், நம்பி வந்தவர்களிடம் கணிசமான பணம் வசூலித்து கொண்டு, அவர்கள் குறையையும் நீக்காத முகமதுவுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்