என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பாரிய அசௌகரியங்கள்

இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், தற்போதைய நிலைமையை மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது எனவும், இந்தோனேசிய அரசாங்கம் உறுதியான உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில், படகில் இருந்த தாம் இறங்கத் தயாரெனவும் அகதிகளின் புதிய பேச்சாளர் நிமல் தெரிவித்துள்ளார். 

                            அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில்; இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக ஒரேபடகில் தங்கியிருந்த நாம் எவ்வித வசதிகளுமின்றி அவஸ்த்தைப்படுகிறோம். சுமார் 240அகதிகள் உள்ள இப்படகில், 31 சிறுவர்கள் உள்ளனர். அவர்களும் தற்போது பல்வேறு நோய்களில் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில் தற்போது படகில் இரவுநேரங்களில் உறங்கமுடியாத வகையில் எலிகள் கடித்துவருகின்றன. தற்போது படகில் இருந்து இறங்குவதற்கே அனைவரும் விரும்புகிறோம். எனினும் இந்தோனேசிய அரசாங்கம் தமது பாதுகாப்பு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் உறுதியளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்