என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 15 ஏப்ரல், 2010

கொல்கத்தா அணி மீது ஷாருக்கான் அதிருப்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று மிகவும் மோசமாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது. அந்த அணி 7-வது தோல்வியை சந்தித்து உள்ளது. 10 புள்ளியுடன் உள்ளது.இந்த தோல்வி மூலம் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்துவிடும் அபாயத்தில் உள்ளது.
இனி வரும் ஆட்டங்களில் அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (17-ந்தேதி), மும்பை இந்தியன்ஸ் (19-ந் தேதி) ஆகியவற்றுடன் மோத வேண்டி உள்ளது.
ரன் ரேட்டிலும் அந்த அணி மிகவும் பின் தங்கி இருப்பதால் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையில் உள்ளது.
இதனால் அந்த அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் அதிருப்தி அடைந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த தோல்வியால் மிகுந்த வேதனை அடைகிறேன். அணி சிறப்பாக ஆடாததற்காக ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வீரர்கள் இன்னும் முழு திறமையை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இது போதுமானதாக இல்லை என்றாலும் சிறப்பாக ஆட முயற்சி மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த ஐ.பி.எல். போட்டியிலும் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.