என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 1 ஏப்ரல், 2010

4 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியாவினால் கையளிப்பு

வடக்கின் மீள் கட்டுமானப் பணிகள்
வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கென இந்திய அரசு 200 மில் லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சம் சீமெந்து மூடைகளை நேற்று கையளித்தது.
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த், தேச நிர்மான, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செய லாளர் டபிள்யூ.
கே.கே. குமாரசிறியிடம் சீமெந்து மூடைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
கொழும்பு பேலியாகொடையிலுள்ள அல்ரா டெக் சிமென்ட் லங்கா நிறுவனத்தில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வீடு வாசல்களை இழந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
மீளக் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 சீமெந்து மூடை கள் வீதம் வழங்க தேச நிர்மான அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசு ஏற்கனவே 2600 மெற்றிக் தொன் கூரைத் தகடுகளை வழங்கியிருந்தது. அதற்கு மேலதிகமாகவே 20,000 மெற்றிக் தொன் கொண்ட நான்கு இலட்சம் சீமெந்து மூடைகளை வழங்க முன் வந்துள்ளது.
மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அந்தந்த பகுதி யிலுள்ள பிரதேச செயலாளரின் சிபாரி சுகளுக்கு அமைய சீமெந்து மூடைகள் வழங் கப்படும். இந்திய அரசு இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் சமைய லறை பாத்திரங்கள் என இலங்கை நாணயப்படி 610 மில்லியன் ரூபா பெறுமதி யான பொருட்களையும் முன்பே கையளித் திருந்தது.
மீளக் குடியமர்த்தவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை செய்யும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.