என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 17 ஏப்ரல், 2010

ஏ.ஆர்.ரஹைனா பெருமிதம்!

யரோடு யாரை ஒப்பிட்டாலும் வள்ளென்று விழுந்து வைக்கும் விவிஐபிகள் கூட ஒரு விஷயத்தில் உற்சாகம் ஆகிவிடுவார்கள்.அது? உங்களை விட உங்க வாரிசு பின்னி எடுக்குதே என்று பாராட்டுகிற போது! அப்படி ஒரு உற்சாகத்தைதான் பார்க்க முடிந்தது ஏ.ஆர்.ரஹைனாவிடம்.

உங்களை விட உங்க பையன் ஜி.வி.பிரகாஷ் பெரிய மியூசிக் டைரக்டர் ஆகிட்டாரே என்று கேட்டதற்குதான் அத்தனை சந்தோஷம் அந்த அம்மாவின் முகத்தில்! இந்த விஷயத்தில் என்னை விட சந்தோஷப்பட யாரால் முடியும்? என் பையன் என்னை முந்துறான்ங்கிறது நல்ல விஷயம்தானே என்றார். ஆனால், போட்டியில நானும் இருப்பேன். அது பையனா இருந்தாலும் சரி. அண்ணனா இருந்தாலும் சரி. எல்லாருக்கும் ஒரு டைம் வரும்போது எல்லாம் சரியா நடக்கும். எனக்காக டைம் இப்போதான் வந்துகிட்டு இருக்கு என்று அவர் சொல்லும்போது அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது தன்னம்பிக்கை.
மெட்டுக்கு பாட்டு எழுதுவது ஈசியா, பாட்டுக்கு மெட்டு போடுவது ஈசியா என்றால், பாட்டுக்கு மெட்டு போடுவதுதான் நல்லது என்றார் ரஹைனா. ஆனால் வரிகளுக்கு இசையமைப்பதும் ஒரு சவால்தான் என்பது அவரது கட்சி.
என்னவோ போங்க, பாட்டு காதுக்கு கேட்கிற மாதிரி இருந்தா அது போதும்!