என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

‘பயங்கரவாதம் போன்று நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது விகிதாசார தேர்தல்முறை

பயங்கரவாதம் போன்று நாட்டிற்கு பெரும் பிரச்சினையாகவுள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தாருங்கள் என அமைச்சர் டலஸ் அழகப் பெரும நாட்டு மக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

எவரிடமும் மண்டியிடாத முதுகெலும்புள்ள ஒரு அரசை கட்டியெழுப்புவதற்கும் இந்த ஆணையை மக்கள் பெற்றுத்தர வேண்டும். எக்காரணம் கொண்டும் மக்கள் எமக்கு வழங்கும் ஆணையை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்பதை உறுதியுடன் வாக்களிக்கிறோம் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இச் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய நிலையில் நாம் 140 ஆசனங்களை பெறுவோம் என்ற நிலையில் இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கடந்த 2008ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது பாராளுமன்றம் சந்தையாக தென்பட்டது. டாலர்கள் புரண்டன. பேரங்கள் பேசப்பட் டன. ஒவ்வொருவரிடமும் மண்டியிட வேண்டியிருந்தது. இந்த நிலை இல்லாமல் எவரிடமும் மண்டியிடாது, முதுகெலும்புள்ள ஒரு அரசாக நாட்டின் நன்மைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் தேவையான சட்டங்களை, கொண்டுவரக்கூடிய நிலை ஏற்பட வேண்டும்.

1978
ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்த்தனவினால் அறிமுகப் படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறை யானது பரீட்சார்த்த மாகவே அறிமுகப் படுத்தப் பட்டது. விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்காக ஜே.ஆரினால் ஏற்படுத்தப்பட்ட குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஏ. கே. வில்சன், பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்துவதாக கூறிய இந்த தேர்தல் முறையினுள் நாம் 30 வருடங்களே கழித்துவிட்டோம்.
அதாவது அவர்களது ஆய்வுகூடத்தில் அடைபட்டுப்போன எலிகளாக 30 வருடங்கள் இருந்திருக்கிறோம். இந்த ஆய்வு கூடத்தை உடைத்தெறிவதும், அதில் எலிகளாக அடைப்பட்டுக் கிடக்கும் மக்களை மீட்பதுமே எமது நோக்கம் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரி வித்தார். அமைச்சர் டலஸணுடன், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவும் கலந்து கொண்டார்