என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 1 ஏப்ரல், 2010

சிறுவர் போராளிகள், அங்கவீனர்கள்;1300 பேர் இன்று உறவினரிடம் ஒப்படைப்பு!

புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர்களடங்கிய சுமார் 1300 பேர் இன்று முதலாம் திகதி விடுவிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவிருப்பதாக
புனர்வாழ்வு  நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.


வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிறுவர் பேராளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர்