என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 15 ஏப்ரல், 2010

ப்ரீத்தி ஜிந்தாவுடன் அவுஸ்திரேலிய நட்சத்திரம் பிரட் லீ காதல்?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நடந்த இரவு நேர விருந்தில் ப்ரீத்தியும் பிரட் லீயும் பிரட்டும் ஜாமும் போல ஒட்டி உறவாடினார்களாம்.
இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து மனம் வெதும்பித்தான் யுவராஜ் சிங் அணியை விட்டே வெளியேறுவேன் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது (யுவராஜ் சிங் இப்போது அதை மறுத்துள்ளார்).
இருவரும் டேட்டிங் போனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை பிரட் லீயின் மேனேஜர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் அணியினர் இப்படிக் கூறுகின்றனர்:
"ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் அணி வீரர்கள் மீது தனி பிரியம். அதனால்தான் அவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். நட்புடன் அணைத்துக் கொண்டார்.
முன்பு யுவராஜ் சிங்கை அவர் கட்டிப் பிடித்ததை இப்படித்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். அணியின் நன்மைக்காகவே ப்ரீத்தி இந்த அளவு சுதந்திரமாக அனைவருடனும் பழகி வருகிறார். அதைப் போய் தவறாகப் பேசுவதா?" என்றனர்.