என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 1 ஏப்ரல், 2010

ஸ்ரீலசுக பிரசாரக் கூட்டத்தில் இசைக்கச்சேரி நடத்திய குழு விபத்தில் சிக்கி மூவர் பலி!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் எஸ்.பி. திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இசைக் கச்சேரி நடத்திய குழுவினர் சென்ற வாகனம் ரயிலில் மோதுண்டதில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை, கிரிபத்கும்புர பகுதியில் சிவப்பு சமிக்ஞையையும் தாண்டிச் செல்ல முற்பட்ட வேளை இவ்விபத்து
சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரஸ்தாப வாகனம் ரயிலில் மோதுண்டு சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.