என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

சானியா - சோய்ப் திருமணம் இன்று நடைபெற்றது

இரு முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்தான சானியா மிர்ஸா சோயப் மாலிக் திருமணம் இன்று திடீரென நடத்தி முடித்து வைக்கப்பட்டு விட்டது.இருவருக்கும் ஏப்ரல் 15ம் தேதிதான் திருமணம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இடையில் இரண்டு முறை முன்கூட்டியே திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 

ஆனால் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை ஹைதராபாத் போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருப்பதாலும், அவர் மீதான ஆயிஷா தொடர்ந்த வழக்கு சட்டப்படி இன்னும் ரத்தாகாமல் இருப்பதாலும் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது என ஹைதராபாத் காஜி அஸ்மத்துல்லா கூறியதால் கடைசி நேரத்தில் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சானியாவின் செய்தித் தொடர்பாளர் ருச்சா நாயக் கூறுகையில், இன்று சானியாவின் திருமணம் நடைபெறும். இன்று பிற்பகல் 1 மணிக்கு திருமணம் தாஹ் கிருஷணா ஹோட்டலில் நடைபெறு என அறிவித்தார். 

ஆனால் அதற்கு சற்று முன்பாகவே திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

தாயார் சேலையைக் கட்டி.. 

தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. அப்போது சிவப்பு நிற சேலையில் மணக்கோலத்தில் இருந்தார் சானியா. இந்த சேலை, சானியாவின் தாயார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்யாணத்தின்போது அணிந்திருந்த திருமணச் சேலையாம். 

சோயப் மாலிக் கருப்பு நிற ஷெர்வாணி அணிந்து மாப்பிள்ளைக் கோலத்தில் காணப்பட்டார். 

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கல்யாணத்தில் கலந்து கொண்டனர். 

திருமணம் முடிந்த வியாழக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். 

சானியா வீட்டிலிருந்து வெளியேறினார் சோயப் 

முன்னதாக சானியாவைத் திருமணம் செய்வதற்காக ஹைதராபாத் வந்து, சானியாவின் வீட்டில் தங்கியிருந்த சோயப் மாலிக் தற்போது அங்கிருந்து வெளியேறினார். 

ஹைதராபாத்துக்கு ஏற்கனவே வந்து விட்ட சோயப் மாலிக், சானியாவின் வீட்டிலேயே தங்கியிருந்தார். இது இஸ்லாம் அமைப்புகளின் கோபத்தை சம்பாதித்தது. இதுதொடர்பாக சன்னி உலமா வாரியம் நேற்று திடீரென சோயப், சானியா மீது பாத்வா விதித்தது. 

கல்யாணத்திற்கு முன்பே சோயப் மாலிக், சானியா வீட்டில் சேர்ந்து இருப்பது இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் புறம்பானது. இதை ஏற்க முடியாது. கண்டனத்துக்குரியது. எனவே இஸ்லாமியர்கள் யாரும் இவர்களின் கல்யாணத்திற்குப்போகக் கூடாது என்று அந்த அமைப்பு அறிவித்த்து. 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சானியாவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தவறான கருத்து பரவியிருப்பது குறித்து விளக்கம் அளிக்க இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. சிலர் சொல்வது போல சானியா வீட்டில் சோயப் மாலிக் தங்கியிருக்கவில்லை. சில நாட்களாக அவர் அங்கு தங்குவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

இருப்பினும் சன்னி உலமா வாரியத்தின் பாத்வாவைத் தொடர்ந்த சோயப் மாலிக், சானியா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சோயப்பின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சானியா வீட்டில்தான் தொடர்ந்து தங்கியுள்ளனர். 

இதற்கிடையே பாத்வா குறித்து அகில இந்திய சன்னி உலமா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இப்படியெல்லாம் யாரும் பாத்வா விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.