என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 3 ஏப்ரல், 2010

பெரிய வெள்ளி : தங்களைத் தாங்களே துன்புறுத்தும் பிலிப்பைன்ஸ் பக்தர்கள்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் மரித்த இயேசு பிரானின் மரணத்தையும் அவரது உயிர்த்தெழுதலையும் நினைவுகூறும் முகமாக இன்று பிலிப்பைன்ஸ் சன் ஜூன் பிகான் கிராமத்தில் மக்கள் சிலுவை சுமந்து ஆணி அறைந்து தங்களைத் தாங்களே வருத்தி இன்றைய புனித நாளை நினைவு கூறுகின்றனர்.(பட இணைப்பு)

நமது பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனாக இப் பூவுலகில் பிறந்து சிலுவைப் பாதையில் மரித்த இறை மகன் இயேசு பிரானின் இன்றைய தியாக நினைவு நாளை நினைவுகூறும் முகமாக உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவராலும் பெரிய வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படுகிறது.
மத்திய பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று இப்புனித நாளை நினைவுகூரும் முகமாக றோமன் கத்தோலிக்க ஆலய மக்கள் இறைமகன் இயேசு எவ்வாறு பாடுகளை அனுபவித்தாரோ அவ்வாறு தாங்களும் அதன் தார்ப்பரியத்தை உணர வேண்டும் என்பதற்காவே இவ்வாறான துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
வருடத்தில் ஒருநாள் அனுபவிக்கும் இந்த வலியை தாங்கிக் கொள்வது சிரமம் என்றபோதிலும் அதனை ஒரு பொருட்டாக கொள்வதில்லை என ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்