நேற்றிரவு மொகாலியில் நடந்த 31ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப வீரர் ஷான் மார்ஷ் 2, அணித்தலைவர் சங்கக்கரா 45, யுவராஜ்சிங் 36, ரவி பொபரா 42, இர்பான் பதான்16, ஓட்டங்களைப் பெற்றனர். இதன் படி நிர்ண்யிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி181 ஓட்டங்களைப்பெற்றது.
182 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி ஆரம்ப வீரர் கலிஸ் 9, மனீஷ் பாண்டே 29, விராட் கோலி 42, உத்தப்பா 22, பீட்டர்சன் 66, ஓட்டங்களை பெற்றனர். இதன் படி பெங்களூர் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 184 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சீரான வேகத்தில் ஸ்கோர் நகர்ந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரன்னிலும் (25 பந்து), ரன்னிலும் (26 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். இதை தொடர்ந்து ராபின் உத்தப்பா ஆட வந்தார்.
16ஆவது ஓவர் வரை ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கையே ஓங்கி இருந்தது. அப்போது பெங்களூர் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டன. தனது 8ஆவது போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது 7ஆவது தோல்வியாகும். பஞ்சாப் அணி இந்த ஆட்டத்திலும் தோல்வியை தழுவியதால் அணியின் அரைஇறுதி கனவு ஏறக்குறைய முடிந்து விட்டது.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இது 5ஆவது வெற்றியாகும். பஞ்சாப்புக்கு எதிரான முதலாவது போட்டியிலும் பெங்களூர் அணி வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.