என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

வியாழன், 1 ஏப்ரல், 2010

மொஸ்கோ தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு செச்னிய கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரியுள்ளது

ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு செச்னிய கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது இந்தத் தாக்குதலை தமது அமைப்பே மேற்கொண்டதாக, செச்னிய கிளர்ச்சி அமைப்பின் தலைவர் டொக்கு உமாரோவ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

 
ரஸ்ய தநைலகர் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 39 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
 
இந்தத் தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு தாமே கட்டளையிட்தாக செச்னிய கிளர்ச்சி அமைப்புத் தலைவர் டொக்கு தெரிவித்துள்ளார்.
 
கடந்தப் பெப்ரவரி மாதம் வறிய செச்னிய மக்கள் மீது ரஸ்ய படையினர் நடத்திய தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரஸ்ய பிரதமர் விளாடிமிர் புட்டீன் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், குறித்த தீவிரவாத அமைப்பின் மற்றுமொரு பேச்சாளர் இந்தத் தாக்குதல்களை தமது அமைப்பு நடத்தவில்லை என சர்வதேச ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்