வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்றுகாலை 7.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது வயது நிரம்பிய பாடசாலை மாணவியொருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன், இன்னொரு மாணவியான 17வயதுடையவர் கையில் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. பிரேக் இல்லாத நிலையில் அப்பகுதியில்
சென்று கொண்டிருந்த லொறியே குறித்த மாணவிகள்மீது மோதியுள்ளது. படுகாயமடைந்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வவுனியா பொலீசார் லொறி சாரதியைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இது இவ்விதமிருக்க வவுனியா கோயில்குளம் பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் கிணற்றியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பிந்திய செய்தியில்.. வவுனியா கோயில்குளம் பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்தமை தெரிந்ததே. குறித்த பல்கலைக்கழக மாணவி தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து நேற்றிரவு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், சடலம் இன்றுகாலையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பிந்திய செய்தி) காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பு லொறி மோதி உயிரிழந்தவர் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்றுகாலை 7.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது வயது நிரம்பிய பாடசாலை மாணவியொருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன், இன்னொரு மாணவியான 17வயதுடையவர் கையில் படுகாயமடைந்தமை தெரிந்ததே. பிரேக் இல்லாத நிலையில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த லொறியே குறித்த மாணவிகள்மீது மோதியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஒட்டிசுட்டானைச் சேர்ந்த அரவிந்தகுமார் இராசலட்சுமி தம்பதிகளின் புதல்வியான கஷ்மிகா என்று தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வவுனியா பொலீசார் லொறி சாரதியைக் கைதுசெய்து விசாரணை செய்கின்றனர். வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெயர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. (தகவல்.. அதிரடியின் வவுனியா நிருபர்களில் ஒருவரான “பி”)