என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

புதன், 31 மார்ச், 2010

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலில் தமிழில் வழக்காடல்

சென்ற வாரம் மதுரையில் வழக்குரைஞர்கள் தமிழில் வாதாடினார்கள். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக தமிழில் வழக்காடல் நேற்று நடந்துள்ளது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த வாரம் வக்கீல்கள் தமிழில் வாதாடினார்கள். இதற்கு நீதிபதிகள் அனுமதி கொடுத்தத£ல் வக்கீல்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

காதல் ஜோடியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை

அந்த சாதியில், ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக கருதப்படுவது வழக்கம். எனவே, அவர்களின் காதலுக்கு பப்லியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று, சண்டிகாரில், 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடன் காதல் மலர்ந்தது எப்படி? சானியாமிர்சா பேட்டி

இந்தியாவில் இளம் டென்னிஸ் புயல் சானியா மிர்சா (23). இவர் தனது கவர்ச்சியான தோற்றம், சுறுசுறுப்பான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை சிறை பிடித்துள்ளார். இவருக்கும், குடும்ப நண்பர் சோரப் மிர்சாவுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 28-ந்தேதி

செவ்வாய், 30 மார்ச், 2010

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னுநம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?

குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பெண் துறவி சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு

நாசிக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மலேகான் குண்டுவெடிப்பில் கைதான பெண் துறவி பிரக்யா சிங் மறுத்து வருகிறார். இதனால் அவருடைய உடல்நிலை மோசமாகி வருகிறது.மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் துறவி

நளினி விடுதலை மறுப்பு: அரசாணையின் முழு விவரம்

நளினியை விடுதலை செய்வது தொடர்பாக சிறை ஆலோசனைக் குழு வேலூர் சிறையில் ஜனவரி 20-ம் தேதி கூடி பரிசீலித்தது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 18 பேர் கொலையுண்ட சம்பவத்தில்,​​ கொலையாளிகளுடன் நளினியும் இணைந்து சதியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அரசு தெரிவித்துள்ளது

துபாயில் 17 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை

பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்ததற்காக 17 இந்தியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கி துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது சார்ஜாவில் அல்&ஜாஜா என்ற பகுதியில் பல்வேறு நாட்டினர் தங்கும் தொழிலாளர் முகாம் ஒன்று உள்ளது. இங்கு சட்டத்திற்கு மாறாக மதுபானம் விற்பனை செய்ததில்

வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!! (அதிரடி நிருபரால் எடுக்கப்பட்ட மனதை உருக வைக்கும் புகைப்படங்கள் முழுமை


கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர்.

திங்கள், 29 மார்ச், 2010

ஈபிஆர்எல்எப் வரதராஜப் பெருமாள் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்

ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதராஜப் பெருமாள் இன்று இலங்கைக்கு சென்றுள்ளார். இந்தியாவில் இருந்து தனது கட்சியின் தேர்தல் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது. மனைவி, மாமன் ஆகியோர் சகிதம் அவர் பயணித்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது அதனுடன் கூடவே இந்தியாவை வந்தடைந்தார்.

மட்டு. மாநகர சபை உறுப்பினர்கள் நால்வர் அரசில் இணைவு..!!

மட்டு. மாநகர சபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் 4பேர் ஐ.ம.சு.முவில் இணைந்து கொண்டதுடன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அலிஸாஹிர் மெளலானாவை ஆதரிப்பதற்கும் தீர்மானித்துள்ளனர். இவர்களது இந்த தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவிய லாளர் சந்திப்பு அலிஸாஹிர் மெளலானா வின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்றது.

புதுவை இரத்தினதுரையின் விடுதலை:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கவிஞரின் சகோதரி சந்தித்து பேச்சு!

புலிகளின் கவிஞர் என கூறப்படும் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரின் சகோதரி ராசலட்சுமி தனது கணவன் பத்மநாதனுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சென்று சந்தித்து உரையாடினார். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது மனைவி மற்றும் குடும்பம் சகிதமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தார்.

நுரைச்சோலை, சம்பூர் தவிர அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லையென அரசு முடிவு!

நுரைச்சோலை மற்றும் சம்பூர் அனல் மின் நிலையங்கள் தவிர வேறு அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூரிய, காற்று, உயிரியல்வாயு போன்று மாற்று முறைகள் மூலம் மின் உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவே இவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

அரசியல் யாப்பை அரசு முழுமையாக திருத்தாது

மஹிந்தயில் சிந்தனை உள்ளவை மட்டுமே திருத்தப்படும் - சம்பிக்க
அரசியல் யாப்பை அரசாங்கம் முழுமையாக திருத்தம் செய்யாது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மட்டுமே திருத்தப்படும். வெளிநாட்டு அழுத்தம் காரணமாக அரசாங்கம் யாப்பை முழுமையாக திருத்தப்போவதாக வும் இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும்

குவைத்தில் நிர்க்கதியான 70 இலங்கையர் இன்று நாடு திரும்புகின்றனர்

நோய்வாய்ப்பட்டோருக்கு விசேட சிகிச்சை
குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த 70 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்புவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகா மையாளர் எல். கே. றுகுணுகே நேற்று தினக ரனுக்குத் தெரிவித்தார்.கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடையும் இவர்கள்

மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார் - ஜனாதிபதி

நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது

காதலி போனியை மணக்கும் பிரகாஷ் ராஜ்

மனைவி லலிதகுமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனது நீண்ட நாள் காதலி போனி வர்மாவை திருமணம் செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிப் படங்களிலும் சிறந்த குணச்சித்திர  வில்லன் நடிகராகத் திகழ்பவர் பிரகாஷ்ராஜ். காஞ்சீபுரம் படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

சச்சின் பேட்டில் அசத்திய ஹர்பஜன்

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் லீக் போட்டியில், சச்சினின் பேட்டைப் பயன்படுத்தி அதிரடியாக ரன் குவித்ததாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த போட்டிக்கு பின்னர் பேசிய ஹர்பஜன், “இன்றைய போட்டியில் நான் விளையாடப் பயன்படுத்தியது சச்சினின் பேட். அந்த பேட்டை நான் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததற்காக சச்சினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்என்றார்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு : 40 பேர் பலி 18 படுகாயம்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்று காலை 8 மணியளவில் தொடர்ச்சியாக இரு இடங்களில் குண்டு வெடித்தது. மாஸ்கோவின் சுரங்க ரயில்பாதையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டனர். 10 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றனர்.முதல் குண்டுவெடிப்பு மத்திய லுபியங்கா ரயில் நிலையத்தில் உள்ள ரயிலின் இரண்டாவது பெட்டியில் வெடித்தது. இதில் 25 பேர் இறந்தனர்

தென் கொரியா கப்பல் மூழ்கியது : 40 பேரை காணவில்லை

தென் கொரியா கப்பல் ஒன்று வட கொரியா அருகே மூழ்கி விட்டதாகவும், அதில் பயணித்த 40 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதற்றமான நிலை இருந்து வருகிறது.

சனி, 27 மார்ச், 2010

தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்

முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடக பிரிவு’ - ஆணையர் நேற்று அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங் களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு

நித்தியானந்தருடான வீடியோ காட்சிக்கு நடிகை ரஞ்சிதா புதிய விளக்கம்

ஒரே நாள்! ஒரே ஒரு வீடியோ காட்சி... சுவாமி நித்யானந்தாவின் ஒட்டுமொத்த மரியாதையையும் தூக்கி உப்பரிகையில் ஏற்றிவிட்டது. நித்யானந்தாவையும் நடிகை ரஞ்சிதாவையும் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்க்க நேரிட்ட மக்கள் பதறிப்போனார்கள்.தமிழகத்தில் இதைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை என்ற நிலை.

முல்லை நகரிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பம்:வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி!

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.

தொடர் தோல்விகளையும் சர்ச்சைகளையும் சந்திக்கும் பஞ்சாப் அணி

யுவராஜ் சிங் அடிக்கடி பொலிசுக்கு தெரியாமல் வெளியே சென்று விடுகிறார். ஒரு பொறுப்பான வீரராக அவர் நடந்து கொள்வது இல்லை. எங்களுக்கு இருக்கும் பிரச்சினையை அவர் புரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு விடயத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.யுவராஜ் சிங் செயல் குறித்து ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளதாக சண்டிகார் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

பாரதிராஜா இயக்கத்தில் தனுஷ்!

ஒரு நாள் திடுதிப்பென்று பாரதிராஜாவிடமிருந்து அழைப்பு வந்ததாம் தனுஷுக்கு. அடுத்த சில நிமிடங்களில் ஜெமினி பார்ஸன் வளாகத்தில் ஆஜராகிவிட்டார் தனுஷ். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, ஒரு கதை இருக்கு கேக்கறீங்களா தனுஷ்? என பாரதிராஜா சம்பிரதாயமாக ஆரம்பிக்க, 'அய்யோ சார்... உங்க படத்தில் வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய விஷயம். கதையெல்லாம் கேட்க வேணாம்"

நித்துவும் சித்துவும் -தங்கபாண்டியன்

நம்மவர்களுக்கு எதைக்கண்டாலும் ஒரு மயக்கம் தான். ஒரு நடிகர் நல்லவர் வேடத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராகவே இருப்பார் என்று மயக்கம் கொள்வது. ஒருவர் ஏதோ ஒரு துறையில் திறமையானவராக இருந்தால், அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நன்றாகத் தெரியும் என மயக்கம் கொள்வது, ஒரு கிரிக்கெட் வீரரை நாட்டின்

வெள்ளி, 26 மார்ச், 2010

சிரச அலுவலக தாக்குதல் சம்பவத்துடன் அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது

கொழும்பு, ப்ரேபு×க் பிளேஸிலுள்ள எம்.ரி.வி./ எம்.பி.சி.நிறுவன தலைமை அலுவலகம் மீது கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுடன் அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்றும் அவ்வாறான எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன், இந்திக பாராளுமன்றம் வர முடியும்

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக மீண்டும் கூட்டப்படும் போது, அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க முடியும் என்பது அரசின் நிலைப்பாடு.

கட்சிபேதமின்றி சகலரும் பங்கேற்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம்

ஏப். 22ம் திகதி கூடும் புதிய பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும் முன்னுரிமை

தேர்தலின் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி கூடும் பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சக்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல் வீடியோவை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

கொழும்பில் அமைந்துள்ள சக்தி தொலைக்சாட்சி தாக்குதல் தொடர்பிலான வீடியோ நாடாவை பொலிஸாரிடம் கையளிக்குமாறு சக்தி தொலைக்காட்சி நிர்வாகப் பணிப்பாளரிடம் கொழும்பு மஜிஜ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொம்பனித்தெரு

நக்மா திருமண அறிவிப்பு

பீல்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹீட்டான செய்திகளுக்கு நக்மா எப்போது கியாரண்டி. சவுரவ் கங்குலி, போ‌ஜ்பு‌ரி நடிகர் ரவிகிஷன் என்று பலருடன் இணைத்துப் பேசப்பட்டவர்.தீவிரவாதிகளுடன் தொடர்பு என எடக்கு மடக்கான விஷயத்தில் மாட்டிக் கொண்டார்.

நக்மா அவ்வளவுதான் என்று நினைத்த நேரம் அரசியலில் ஈடுபடப் போவதாக இன்னொரு புயல் கிளம்பியது. இது

வியாழன், 25 மார்ச், 2010

ஊ.சே. நிதிய உறுப்பினர் நிலுவைகளுக்கு 13.75 வீதமாக வட்டி அதிகரிப்பு

30% வீத வீடமைப்பு உதவித் தொகை
இணையம் மூலம் தொடர்புகொள்ள திட்டம்
தேசிய அடையாள அட்டை இலக்கங்களையே பயன்படுத்த ஆலோசனை
சுயதொழிலில் ஈடுபடுவோரையும் சேர்க்க தீர்மானம்
ஊழியர் சேமஇலாப நிதியம் 2009இல் அதன் உறுப்பினர் நிலுவைகளுக்கான வட்டி வீதத்தினை முன்னெப்போதும் இல்லாத வகையில் 13.75 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக வாழ்க்கைத் தொழில், தொழில் உறவுகள் அமைச்சர் அத்தாவுட செனவிரட்ன நேற்று தெரிவித்தார்.

பர்மாவின் புதிய தேர்தல் சட்டவிதிக்கு ஆங் சாங் சூசி எதிர்ப்பு

பர்மாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான புதிய சட்டத்தைத் தாம் எதிர்ப்பதாக ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சித் தலைவி ஆங் சாங் சூசி தெரிவித்துள்ளார்.பர்மாவின் புதிய சட்டத்தின் படி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடவேண்டுமானால் கட்சிகள் மீண்டும் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

உள்விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட இடமளியோம் -பிரதமர்


இறைமையும், ஆட்புல ஒருமைப்பாடும் மிக்க இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட இடமளியோம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்கா நாரம்மலவில் தெரிவித்துள்ளார். உள்ளூர், வெளியூர் அழுத்தங் களை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

கச்சேரி ஆரம்பம விமர்சனம்


பெரிய மீசை, திண்ணை வச்ச வீடு, பட்டை கரை வேட்டியுடன் பண்ணையார் ஸ்டைலில் தோன்றுகிறார் அழகம்பெருமாள். ஆஹா, பஞ்சாயத்துல நிக்க வச்சு பஞ்சராக்க போறாங்கப்பு என்று ரணத்திற்கு ஆயின்ட்மென்ட் தேட ஆரம்பித்தால்... 'அட போங்கய்யா, நாங்க வேற ரூட்டு' என்று கச்சேரியை களை கட்ட விடுகிறார் திரைவண்ணன். புது இயக்குனராம். பொழச்சிப்பீங்க சாரே! ஆனாலும் இவர் கதையை தேர்வு

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது

தைவான் நாட்டில் உள்ள கோசியுங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமணமான மற்றும் திருமணமகாத பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது.அப்போது திருமணமாகி அதிக குழந்தை பெறும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அன்பும் நிலைத்து இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வருவது இல்லை என்றும் தெரிவித்தனர்.

புதன், 24 மார்ச், 2010

சுவிட்சர்லாந்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளன

சுவிட்சர்லாந்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.2009ம் ஆண்டில் வாரத்திற்கு ஒரு கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத் தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக பட்சமாக சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வருடமொன்றுக்கு சுமார் 250000 குற்றச் செயல்கள் பதிவாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

என்னைப் பற்றி வதந்தி பரப்புவதா? நித்யானந்தாவுடன் தொடர்பு இல்லை; நடிகை யுவராணி பேட்டி

நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ படம் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமியாருக்கு பணி விடை தான் செய்தேன். தவறாக நடக்கவில்லை என்று ரஞ்சிதா மறுத்தார். இது போல் நித்யானந்தாவும் தனக்கு எதிராக சதி வலை பின்னப்படுவதாக குற்றம் சாட்டினார். சதிகாரர்கள் பற்றி ஆதாரங்கள் திரட்டுவதாகவும் விரைவில் அவை வெளியிடப்படும் என்றும் கூறினார்.

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்:வீடியோ ஆதாரம்

நித்யானந்தா ஆசிரம் அவலங்கள் அம்பலமாகி நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.அதற்குள் இன்னொரு அதிர்ச்சி. கல்கி ஆசிரம அவலங்கள் அம்பலமாகியிருக்கிறது.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர்.

செவ்வாய், 23 மார்ச், 2010

உலக நீர்தின விழா

 உலக நீர்தின விழா இன்று திங்கட்கிழமை அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. மடு வலையகல்வி வலையத்துக்கு 11 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

ரஜினி-அஜீத் நெருக்கம்! : விஜய் தரப்பில் குழப்பம்

விஜய்யின் 51 வது படம் 'பாடிகாட்' படத்தின் ரீமேக் என்பது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் என்று சொல்லப்பட்டாலும், சேட்டன்களின் கூற்று வேறு மாதிரி இருக்கிறது "இது எங்க ஊர்ல பிளாப் படமாச்சே" என்கிறார்கள் அவர்கள். ஆனால் தமிழில் எடுக்கும்போது சிற்சில மாற்றங்களை செய்து இங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்றார்போல எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் சித்திக்.

சாமியார் நித்தியானந்தா வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு

ஆபாச சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தாவின் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று கோரி சென்னையை சேர்ந்த ஆர்.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது:- 

சுவிசில் ஈழத்தமிழ் உறவுகளின் இன்னல்கள் நீங்க குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் பிரார்த்தனை

உலகெலாம் மன அமைதி இழந்த மக்களது உள்ளத்திலே சாந்தியையும், மகிழ்சியையும் ஏற்படுத்தக்கூடிய வாழும்கலை என்கின்ற யோகக்கலையின் தலைவராக விளங்கும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்து சூரிச் நகரிற்கு 20.03.2010 சனிக்கிழமை மாலை வருகைதந்து பிராத்தனையை முன்னின்று நடாத்தினார்.பஜனைவாழம்கலை அறிமுகம்தாயக உறவுகளுக்கு குருஜி 

திங்கள், 22 மார்ச், 2010

உலக நீர் நாள்


ஐக்கியநாடுகள்அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது.

வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸினது அளப்பரிய சேவைக்கு பெரும் பாராட்டு

வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸினது அளப்பரிய சேவைக்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திஸா நாயக்க பாராட்டுத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிருவகத்தில் (ஸ்லீடா) கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டில் வைத்தே அமைச்சின் செயலாளர் வவுனியா அரசாங்க அதிபருக்கு இந்த பாராட்டினை தெரிவித்துள்ளார்.

இலங்கையர் ஒருவர் நான்கு வயது சிறுவனை ஆற்றில் வீசிய தாய்

நான்கு வயதுடைய அமிலா சாந்தறுவன் பெர்னாண்டோ என்ற 4வயது சிறுவனை தாயொருவர் களுகங்க ஆற்றில் வீசியுள்ளார். இவ் சிறுவனை லொறி சாரதியொருவர் காப்பாற்ற முனைந்தும் பலனிக்கவில்லை. மேற்படி ஆற்றில் சிறுவன் ஒருவன் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்ட லொறி சாரதி மேற்படி சிறுவனை காப்பாற்றி

மீண்டும் கால்ஷீட் : பிரபுவிடம் அஜீத் வாக்குறுதி

தொலைத்த இடத்தில் தேடுவதும், புதைத்த இடத்தில் தோண்டுவதும் சினிமாவில் அவ்வப்போது நடக்கிற விஷயம்தான். இதோ, தொலைத்த இடத்திலேயே தேட முடிவு செய்திருக்கிறார் பிரபு. அசல் படம் வெளிவந்த சில நாட்களிலேயே கையோடு ஒரு பிரச்சனையும் நடந்தேறியது கோடம்பாக்கத்தில். தெரிந்தோ தெரியாமலோ அஜீத் பேசிய பேச்சு, அசல் படத்திற்கு நல்லதாக அமையவில்லை. படமும் பரவாயில்லை ரகம்தான் என்பதால் கலெக்ஷனில் கல்லெறிந்தது விதி.

கள்ளக்காதலால் மகளை கொன்று நர்சு தற்கொலை

 கள்ளக்காதலுக்காக கணவரை பிரிந்த நர்ஸ், கள்ளக்காதலன் ஏமாற்றியதால் மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர் கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி(40). மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திராநகரில் வசித்தார்.

கணனியை எப்போதும் மேம்படுத்திய நிலையில் வைத்திருக்க உதவும் குறிப்புக்கள்

கணனியின் இயங்கு தளம் டிவைஸ் டிரைவர்ஸ் மற்றும் மென்பொருட்களை எப்போதும் மேன்படுத்திய நிலையில் வைத்திருப்பது முக்கியமாகும். ஹக்கெர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் இது உதவும். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது எதைச் செய்வது என்று விழிப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள்.

1. அப்டேட் ஐ ஆரம்பிக்க முதல் ஒருமுறை கணனியை சுத்தப்படுத்தல் நல்லது அப்டேட் இன் பின்னர் வேகப்படுத்த இது உதவும். தேவையற்ற மென்பொருட்களை முறையாக நீக்கிவிடுதல்

ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்

நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம்.ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே. 

சனி, 20 மார்ச், 2010

விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது � தமன்னா பேட்டி

தமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது. தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.