
யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் பல வருடங்களாக தடைப்பட்டன.ஜனாதிபதியின் பணிப்புரையையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில்பாதை துரிதமாக மீளமைக்கப்பட்டதோடு அடுத்த மாதம் முதல் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் மீளமைக்கப்பட்டு வருவதோடு ஓமந்தை ரயில் பாதையை மீளமைக்க 3.6 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி மன்றம் ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணியை பொறுப்பேற்றுள்ளது.