சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'16 வயதினிலே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் கவுண்டமணி. பின்னர், நடிகர் செந்திலுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தின் லாரல்-ஹார்டி என்று இந்த ஜோடி, புகழப்பட்டது. கவுண்டமணி சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது