என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 22 மார்ச், 2010

கள்ளக்காதலால் மகளை கொன்று நர்சு தற்கொலை

 கள்ளக்காதலுக்காக கணவரை பிரிந்த நர்ஸ், கள்ளக்காதலன் ஏமாற்றியதால் மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர் கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி(40). மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திராநகரில் வசித்தார்.

 சின்னியம்பாளையத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் தரணிக்குமாருடன் ஐந்து ஆண்டுகளாக ரேணுகா தேவி நெருங்கிப் பழகினார்.இதையறிந்த ரேணுகாதேவியின் கணவர் சுரேஷ்குமார், மனைவியை கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்தது. மனைவியை பிரிந்த சுரேஷ்குமார், விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, துடியலூரில் வசிக்கிறார். 

இந்நிலையில், டாக்டர் தரணிக்குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த ரேணுகாதேவி அதிர்ச்சி அடைந்தார்; டாக்டரிடம் அதிருப்தியை தெரிவித்துள்ளார். சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முன்னதாக, தன் ஒரே மகளுக்கு ஊசியில் மயக்க மருந்து செலுத்தி, மயக்கமடைந்ததும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.நேற்று காலை வெகு நேரம் வீடு திறக்காததை கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர், வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே ரேணுகாதேவி தூக்கில் தொங்கியபடியும், சிறுமி பிணமாகவும் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்தவர்கள், சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், தாய், மகளின் பிணத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை நடந்த அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ரேணுகாதேவி எழுதி வைத்த கடிதம் சிக்கியது.கடிதத்தில், 'ஐந்து ஆண்டுகளாக டாக்டரை உயிருக்குயிராக காதலிக்கிறேன். இக்காதலுக்காக, எனது கணவரிடம் இருந்து பிரிந்தேன். தற்போது, தனியார் எப்.எம்.ரேடியோவில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருடன் அடிக்கடி டாக்டர் சுற்றுகிறார். 
எங்கே என்னை விட்டு பிரிந்து விடுவாரோ என்ற அச்சத்தில் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தோம். இந்த தற்கொலைக்கு டாக்டர் தரணிக்குமார் தான் முழுக் காரணம்' என, கடிதத்தில் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். கைதான டாக்டர் தரணிக்குமார், திருமணமானவர். அவருக்கு, மனைவியும், குழந்தையும் உள்ளனர்.