என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

புதன், 24 மார்ச், 2010

என்னைப் பற்றி வதந்தி பரப்புவதா? நித்யானந்தாவுடன் தொடர்பு இல்லை; நடிகை யுவராணி பேட்டி

நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ படம் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமியாருக்கு பணி விடை தான் செய்தேன். தவறாக நடக்கவில்லை என்று ரஞ்சிதா மறுத்தார். இது போல் நித்யானந்தாவும் தனக்கு எதிராக சதி வலை பின்னப்படுவதாக குற்றம் சாட்டினார். சதிகாரர்கள் பற்றி ஆதாரங்கள் திரட்டுவதாகவும் விரைவில் அவை வெளியிடப்படும் என்றும் கூறினார்.
 

இந்த நிலையில் நடிகை யுவராணியையும் நித்யானந்தாவுடன் இணைத்து செய்திகள் வெளியாகியுள்ளன. இண்டர்நெட்டில் ஏராளமான இணைய தளங்களில் இச்செய்தி பரவி வருகிறது. 

இதுபற்றி யுவராணியிடம் மாலைமலர் நிருபர் இன்று கேட்டபோது, நித்யானந்தா வுடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார். அவர் கூறியதாவது:- 

நித்யானந்தா சாமியை 45 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதில் ஒருத்தியாக நானும் பார்த்தேன். என் இரு குழந்தைகளையும் அழைத்து போய்தான் சந்தித்தேன். வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நடிகை என்பதால் அவதூறு பரபரப்பு கின்றனர். 

14
வருடமாக என் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் கணவருக்கு உடன் பிறந்தவர்கள் பலர் உள்ளனர். அவர் குடும்பம் ரொம்ப பெரியது. 

என்னை முழுமையாக அவர்கள் நம்புகிறார்கள். நித்யானந்தாவுடன் சம்பந்தப்படுத்தி வந்த செய்திகளை பொருட்டாக நினைக்கவில்லை. என் மாமியாரும் என் மேல் நம்பிக்கை வைத்துள்ளார். 

அவர்கள் இதை நம்பி இருந்தால் நான் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். என்னைப்போல் திரையுலகில் இருந்து நிறைய பேர் நித்யானந்தாவை பார்த்துள்ளனர். அவரைப் பற்றி இப்படியெல்லாம் செய்திகள் வரும் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை. 

என் மேல் மட்டும் வயிற்றெரிச்சலால் அவதூறு பரப்புகின்றனர். திருமணமாகி குடும்பம் நடத்தும் ஒரு பெண்ணை இது போல் அசிங்கப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. 

இந்த அவதூறு செய்திகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுக்க உள்ளேன். 
இவ்வாறு யுவராணி கூறினார்