என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

செவ்வாய், 23 மார்ச், 2010

சுவிசில் ஈழத்தமிழ் உறவுகளின் இன்னல்கள் நீங்க குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் பிரார்த்தனை

உலகெலாம் மன அமைதி இழந்த மக்களது உள்ளத்திலே சாந்தியையும், மகிழ்சியையும் ஏற்படுத்தக்கூடிய வாழும்கலை என்கின்ற யோகக்கலையின் தலைவராக விளங்கும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்து சூரிச் நகரிற்கு 20.03.2010 சனிக்கிழமை மாலை வருகைதந்து பிராத்தனையை முன்னின்று நடாத்தினார்.பஜனைவாழம்கலை அறிமுகம்தாயக உறவுகளுக்கு குருஜி 

 அவர்கள் ஆற்றிவரும் சமூகப்பணி, ஆன்மீகப் பணி போன்றவற்றை எடுத்துக்காட்டும் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் நடைபெற்ற அரங்கிற்கு சூரிச் சிவன் ஆலயத்தை தரிசித்து வருகைதந்த குருஜி அவர்களை பூரணகும்ப மரியாதையுடன் மக்கள் அழைத்து வந்தனர்.

மண்டபம் நிறைந்த மக்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டு ஆலோசனைகளையும் சுவாமியின் அரவனைப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஈழத்தில் நடந்த இன்னல்கள் கண்டு உலக அரங்கில் தமிழினத்தின் பிரச்சனைகளை, அவர்களின் வலிகளை தெரியப்படுத்தி வரும் சுவாமி தனது உரையின் போது ஈழத்தமிழர்களின் விடிவிற்காக தமது நிறுவனம் முழுமையாக பாடுபடும் என்றும் தமிழீழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமது அமைப்பு அதற்கான சேவைத்திட்டங்களை விஸ்தரித்துள்ளதாகவும் தெரியப்படுத்தினார்.