என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 15 மார்ச், 2010

நடிகை ரஞ்சிதா தொடர்ந்து சேவை செய்வார்: சாமியார் நித்தியானந்தா

படுக்கை அறை வீடியோ காட்சியில் இருப்பது தான்தான் என ஒப்புக்கொண்டுள்ள நித்யானந்தா தனது பரம பக்தையான நடிகை ரஞ்சிதா தனக்கு தொடர்ந்து சேவை செய்வார் என்றும் கூறினார் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் டிவி, பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியானது.
இது பக்தர்கள், மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு பிறகு, அவரது தரப்பில் ஒரு சிடி வெளியிடப்பட்டது. நானோ, தியான பீடமோ சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லைஎன்று அதில் நித்யானந்தா தெரிவித்தார். அவர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம், ஹரித்வார் கும்பமேளாவுக்கு சென்றிருக்கலாம் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாயின. அவரை தமிழக, கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், நித்யானந்தாவின் உடலில் எண்ணெய் தடவி ரஞ்சிதா மசாஜ் செய்யும் படங்களும் வெளியாயின. இக்காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25&ம் தேதிகளில் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. 

இந்நிலையில், கும்பமேளாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, தனியார் ஆங்கில டிவி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: 

கடந்த 33 ஆண்டு பொது வாழ்க்கையில் புகழின் உச்சியை பார்த்துவிட்டேன். கடந்த சில நாட்களாக மிக அதிகமான அவமானத்துக்கும் ஆளாகி விட்டேன். வாழ்க்கையில் புதிய பாடம் கற்றுக் கொண்டேன். 

வீடியோ காட்சியில் இருப்பது நான்தான். அதெல்லாம் எப்படி யாரால் எடுக்கப்பட்டது என்று விசாரித்து வருகிறேன். அதில் சில காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளன. அதில் வரும் நடிகை ரஞ்சிதா எனது சிஷ்யை. நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து வருகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்தான் என்னை கவனித்துக் கொள்வார். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் என் சீடர்கள். என் சிஷ்யையாக இருந்து எனக்கு சேவை செய்துள்ளார். இப்போதும் சேவை செய்கிறார். இனியும் எனக்கு சேவை செய்வார். 

இச்சைகளை அடக்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால், பிரம்மச்சாரியாக இருப்பதா, வேண்டாமா என்று யாருக்கும் நான் சொன்னதில்லை. அதை அவரவர்தான் முடிவு செய்யவேண்டும். வேறு ஒருவரின் துணையின்றி மனதை அடக்க முடியும் என்றால் பிரம்மச்சரியத்தை பின்பற்றலாம். இன்னொருவரின் உதவி தேவையென்றால் மண வாழ்க்கையில் ஈடுபடலாம். எனக்கு சிற்றின்ப ஆசைகள் எதுவும் இல்லை. எனக்கு வேறொருவரின் துணை தேவையில்லை.