என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 15 மார்ச், 2010

தும்பு ஆலையில் தீ விபத்து; ரூபா 47 கோடி நஷ்டம்

நாத்தாண்டியாவில் துங்கன்னாவ என்ற இடத்திலுள்ள தும்பு ஆலையொன்றில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
ஏற்றுமதிக்காக மூன்று களஞ்சியசாலைக ளில் வைக்கப்பட்டிருந்த பெருந் தொகை தும்புடன் இரண்டு டிராக்டர்கள் மற்றும் போர்க்லிப்ட் இயந்திரமொன்றும் தீயில் எரிந்து நாசமாகின. தீயினால் ஏற்பட்ட நட்டம் 47 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என தும்பு ஆலையின் நிர்வாகம் கூறியுள்ளது.

யின் உக்கிரம் காரணமாக அருகிலிருந்த சுமார் 9 வீடுகள் பாதிக்கப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீ ஏற்பட்ட தையடுத்த சில நிமிடங்களில் மாரவில பொலிஸ¤க்கும் நீர்கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் இலங்கை விமானப் படையின் தீயணைப் புப் பிரிவு ஆகியவை உடனடியாக வந்து தீயை அணைக்க முயன்றபோதும் தற் போதைய வரட்சி காரணமாக போதிய நீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் தீயை முழுமையாக அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தீ விபத்து தொடர்பாக மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.