என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

புதன், 17 மார்ச், 2010

தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் இன்று அனுப்பி வைப்பு!

எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குச்சீட்டுகள் இன்று (17) அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் செயலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தேர்தல் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,


  தபால் வாக்குகளை செலுத்தும் விசேட நாட்களாக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆகிய தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட அந்த நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்காளரை அழைத்து ரகசியமாக வாக்குகளை செலுத்த வாய்ப்பை ஏற்படுத்தவும் வாக்களித்த பின்னர் உடனடியாக அந்த வாக்குச்சீட்டு அடங்கிய பொதியை பாதுகாப்பாக தபால் மூலம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்புவது உறுதிப்படுத்தல் அதிகாரியின் விசேட பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.