ஒரு நாள் திடுதிப்பென்று பாரதிராஜாவிடமிருந்து அழைப்பு வந்ததாம் தனுஷுக்கு. அடுத்த சில நிமிடங்களில் ஜெமினி பார்ஸன் வளாகத்தில் ஆஜராகிவிட்டார் தனுஷ். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, ஒரு கதை இருக்கு கேக்கறீங்களா தனுஷ்? என பாரதிராஜா சம்பிரதாயமாக ஆரம்பிக்க, 'அய்யோ சார்... உங்க படத்தில் வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய விஷயம். கதையெல்லாம் கேட்க வேணாம்"
என்று கூறிய தனுஷை கையமர்த்தியவர், "இல்லை எதுக்கும் கேட்டுடுங்க" என்று சுருக்கமாக சொல்லி முடித்தாராம்.தனுஷுக்கு கதையும் பிடித்துவிட்டது, அவ்வளவு பெரிய மனிதர் தன்னை மதித்து நடத்திய விதமும் பிடித்துவிட்டது. உடனே சம்மதம் சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
காலத்தின் மாற்றங்களுக்கேற்ப மாறுவதே சிறந்த கலைஞனின் இயல்பு என்பதை நன்கு புரிந்து பொம்மலாட்டம் என்ற அசத்தல் த்ரில்லர் கொடுத்தவர் பாரதிராஜா. இந்த மண்ணை பெருமையுறச் செய்த கலைஞர். இன்னும் ஒரு வண்ணமயமான இளமைத் திருவிழாவை இந்த முறை எதிர்ப்பார்க்கலாம் என்கிறார்கள்.