இடுகாட்டில் துவங்கி இடுகாட்டில் முடியும் கதை. அதிலும் அங்கேயே தங்கி படிக்கும் ஒருவன், அதே காட்டுக்கு பிணமாக வருகிறான் என்ற சிந்தனை ஒரு சிறுகதைக்குரிய இலக்கணம். எல்லாம் சரி. ஆனால் கொட்டு, பறை என்று அத்தனையையும் நமது முதுகிலும் அரங்கேற வைக்கிறார்கள் என்பதுதான் ஒரு ஸ்மால் சைஸ் ஐயே ஆர்ட் டைரக்டர் வீரசமர்தான் அந்த சுடுகாட்டு ஸ்டுடண்ட்.
தங்க வசதியில்லாமல் இங்கே தங்கி படிக்கும் இந்த கிராமத்து இளைஞனை அரசியல்வாதியான பிரதாப் எப்படியெல்லாம் பாழாக்குகிறார் என்பதுதான் படம் முழுக்க சொல்லப்பட்டிருக்கிறது. முதிர் கன்னிகளாகிவிட்ட அக்காக்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக தன்னை படிக்க வைக்கும் மினிஸ்டரிடம் கையேந்துகிறார் வீரசமர். அதற்கு அவர் விலையாக கேட்பது இரண்டு உயிர். முதலில் அதிரும் ஹீரோ கிடைக்கிற பணத்துக்காக கொலைகாரனாகவும் சம்மதிக்கிறார். ஆனால், அதே அமைச்சர் தன் பிள்ளையையே கொல்ல சொல்ல துடித்துப் போவதும் பின்பு என்ன செய்கிறார் என்பதும் ட்விஸ்ட்.

வீரசமருக்கு நடிப்பு நன்றாக வருகிறது. கிராமத்து வீட்டில் அக்காவின் செக்ஸ் அத்துமீறலை பார்த்து அதிர்ந்து போகிற காட்சிகளில் அவரது முகத்தில் பரவிக்கிடக்கிறது இருட்டு. மெல்லிய உணர்ச்சிகளை கூட அற்புதமாக வெளிப்படுத்துகிறார். ஆனால், வசனங்களை எல்லாம் ராகம் போட்டு உச்சரிப்பதுதான் அலுப்பு. தான் காதலிக்கும் பெண் தன் ஆட்டோவிலேயே சவாரிக்கு வருவதும், அவள் தவற விட்ட நகைகளை எடுத்து சென்று அவளிடம் ஒப்படைப்பதும் டிபிக்கல் மசாலாவாக இருந்தாலும், முடிவு வேறு மாதிரி இருப்பது ஆறுதல்.
புதுமுகம் அமலாபால் அழகோ அழகு. ஆனால் அவரையும் படம் முழுக்க காட்டாமல் துண்டாடிவிட்டார்கள். இவரை ஹீரோவுக்கே கட்டி வைக்காமல் தமிழ்சினிமா இலக்கணத்தையும் உடைத்திருக்கிறார்கள். பலே!
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் அதிர வைத்திருக்கிறார். பிரதாப்தான் வில்லன். அட...! ஒரு மினிஸ்டர் யாருமே சந்தேகப்படாத வண்ணம் கொலைக்கூலியாக ஒரு மாணவனை வைத்திருக்கிறார் என்பதே விறுவிறுப்பான திரைக்கதைக்கு அஸ்திவாரம். ஆனால்..?
அதே நேரத்தில் பிரதாப்பின் வில்ல அவதாரத்திற்கு ஒரு வெல்கம். படத்தின் மொத்த பாரத்தையும் சுமக்க தயாராக இருப்பவர் போல அறிமுகமாகிறார் பூ பட புகழ் ராமு. நடிப்பும் அட்சர சுத்தம். ராஜ்கிரண் இடத்தை அசால்டாக நிரப்புகிறார் மனுஷன். சரக்கடித்துவிட்டு பிணத்துடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்துவ முத்துக்கள்.
க்ளைமாக்சை தீர்மானித்துக் கொண்டே கதையை நகர்த்திய மாதிரி தெரிந்தாலும் 'அதனாலென்ன?' என்ற கேள்வியும் சப்போர்ட்டுக்கு வருகிறது.
ஒரே ஒரு காட்சியில் அசரடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நவி.சதிசுகுமார். ஜன்னல் வழியாக அக்காவை பார்த்துவிட்டு அதிச்சியில் பின்புறமாக கீழே சாயும்போது சட்டிப்பானையாக உடைந்து சிதறுகிறாரே ஹீரோ, கற்பனைக்கெட்டாத கல(ங்)க்கல்!
ஷாஜன் மாதவின் இசையில் அங்கங்கே மழைச்சாரல்.
வீர சேகரன்- மயான பூமியில் ஒரு மரிக்கொழுந்து!