என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

புதன், 31 மார்ச், 2010

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடன் காதல் மலர்ந்தது எப்படி? சானியாமிர்சா பேட்டி

இந்தியாவில் இளம் டென்னிஸ் புயல் சானியா மிர்சா (23). இவர் தனது கவர்ச்சியான தோற்றம், சுறுசுறுப்பான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை சிறை பிடித்துள்ளார். இவருக்கும், குடும்ப நண்பர் சோரப் மிர்சாவுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 28-ந்தேதி இந்த நிச்சயதார்த்தம் முறிந்தது. இரு வீட்டாரும் சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்குக்கும், சானியா மிர்சாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

இதன்படி சோயிப்மாலிக் 2 வாரத்திற்கு முன்பு தனது சகோதரி, அவரது கணவர் ஆகியோருடன் ஐதராபாத்தில் உள்ள சானியாவின் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது சானியாவின் தந்தை இம்ரான் மிர்சாவிடம், சானியாவை மணக்க ஆசைப்படுவதாக கூறினார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண வரவேற்பை 16 அல்லது 17-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

சோயிப் மாலிக்குடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது பற்றி சானியா மிர்சா கூறியதாவது:- 

எனது அத்தையின் வீடு துபாயில் உள்ளது. இதனால் எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அவரது வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். அப்போது துபாயில் நடைபெறும் எங்களது உறவினர்கள் இல்ல விழாக்களில் கலந்து கொள்வேன்.

இதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும், துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வருவார். நானும், அவரும் பல்வேறு விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டோம். அப்போது இருவரும் நண்பர்களாக பழகினோம். இந்த நட்பு நாளாக நாளாக காதலாக மாறியது. அவரது எளிமை, அடக்கம், கிரிக்கெட் ஆட்டத்திறமை போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். எதையும் ஒளிவு- மறைவின்றி பேசுவார். எளிதில் கோபம் வராது.

டென்னிஸ் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளார். எனது ஆட்டத்தை பற்றி நிறைய விமர்சனம் செய்வார். இதெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு திறமையாளர் எனக்கு கணவராக கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். நான் பாகிஸ்தான் வீரரை மணந்தாலும் இந்தியா சார்பில்தான் டென்னிஸ் ஆடுவேன். நான் பிறந்த மண்ணை மறக்கமாட்டேன். திருமணத்திற்கு பிறகு இருவரும் துபாயில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளோம்.


இவ்வாறு சானியாமிர்சா கூறினார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒற்றுமையை சீர்குலைத்ததற்காக ஒரு ஆண்டு வரை கிரிக்கெட் ஆட சோயிப் மாலிக்குக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும் ரூ.20 லட்சம் அபராதம் செலுத்தும் படியும் கூறியது.

அவர் தற்போது துபாயில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி உள்ளார். எப்போதாவது ஒரு முறைதான் பாகிஸ்தான் செல்கிறார். கடந்த 2002-ம் ஆண்டில் ஐதராபாத் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த நிச்சயதார்த்தம் முறிந்து போனது. நிச்சய தார்த்தத்தை முறித்த சோயிப் மாலிக்- சானியா இருவரும் திருமண பந்தத்தில் இணைவது வித்தியாசமான ஒன்று.