ஆபாச சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தாவின் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று கோரி சென்னையை சேர்ந்த ஆர்.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரில் ஆசிரமம் நடத்தும் சுவாமி நித்தியானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. பொதுமக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்துரைக்கும் நல்ல பணியில் ஈடுபட்டுள்ள அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை தனித்தனியாக விசாரித்தால் உண்மை வெளியேவராது. எனவே, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்தான் நியாயம் கிடைக்கும். அதற்கு நீதி மன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபற்றி வருகிற 24-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்திரவிட்டார்.
சி.பி.ஐ.தரப்பில் வக்கீல் சந்திரசேகர் ஆஜராகி நோட்டீசை பெற்றுக்கொண்டார்