-B.B.C.News
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் சென்று தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கிளிநொச்சியில் வசிக்கின்றவர்களும் வேட்பளார்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி இருந்தும் அந்த வேட்பளார்கள் அங்கு மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்குச் செல்வதற்கு இராணுவத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டி கிராமங்களுக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
ஏனைய கட்சிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இது குறித்து தேர்தல் திணைக்கள அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை என்றும், இந்த நிலைமை குறித்து திங்கட்கிழமை கிளிநொச்சிக்குச் சென்று அங்குள்ள இராணுவ அதிகாரிகளிடம் பேச்சுக்கள் நடத்தப் போவதாகவும் சுரேஷ் பிரேச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
''இலங்கையில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன''-கஃபே அமைப்பு
இலங்கையில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கஃபேயின் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இம்முறை ஒவ்வொரு கட்சிக்குள்ளே இருக்கும் உறுப்பினர்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்றும் கீர்த்தி தென்னக்கோன் கூறுகிறார்.
சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நாட்டின் சில பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் தடுக்கப்படுவதாகவும் கஃபே தெரிவிக்கிறது.
அதிலும் குறிப்பாக கிளிநொச்சிப் பகுதியில் அரசியல் கட்சிகள் வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு கூட ஒவ்வொரு நாளும் இராணுவத்தினரின் அனுமதியை பெறவேண்டிய நிலை உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
தேர்தல் சட்டங்களை நடைமுறைபடுத்துவது தொடர்பில் எவ்விதமான சட்ட அமலாக்கமும் இலங்கையில் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை என்றும் கஃபேயின் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

''மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுங்கட்சி ‘கட்- அவுட்’கள் அகற்றப்படவில்லை'' – குற்றச்சாட்டுக்கள்
இலங்கையில் தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் பொது இடங்களில் காணப்படும் பிரச்சார "கட்அவுட்"கள் ,பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளரினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக அமல் படுத்தப்படுவதாக இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்துகின்றது.
பதாதைகள் ,சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட் களை அகற்றுவதற்காக கடந்த 3 ம் திகதி வரை தேர்தல் திணைக்களத்தினால் காலக்கெடு வழங்கப்டப்டிருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென அந்தக் கட்சி கூறுகிறது.
தற்போது அந்தக் காலக்கெடு திங்கட்கிழமை நள்ளிரவு வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரை தேர்தல் ஆணையத்தினால் பொலிசாருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இது தொடர்பான உத்தரவு முழுமையாக அமல் படுத்தப்படுவதாக இல்லை எனக் கூறும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளரான பொன் செல்வராஜா, ஆளும் கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களின் பதாதைகளும் கட்அவுட்களும் அகற்றப்படாமல் இருப்பது மட்டுமன்றி பொலிஸ் காவலரண்களுக்கு அருகாமையிலும் கூட காணப்படுவதாகக் கூறுகின்றார்.