தைவான் நாட்டில் உள்ள கோசியுங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமணமான மற்றும் திருமணமகாத பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது.அப்போது திருமணமாகி அதிக குழந்தை பெறும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அன்பும் நிலைத்து இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வருவது இல்லை என்றும் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தை பெறும் பெண்கள் மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.
ஒரு குழந்தை பெற்ற 1 லட்சம் பெண்களில் ஆண்டு 11 பேர் தற்கொலை செய்கின்றனர். அதே நேரத்தில் 2 குழந்தை பெறுபவர்களில் ஆண்டுக்கு 7 பேரும், 3 அல்லது 4 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களில் ஆண்டுக்கு 6 பேரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற புள்ளி விவரங்களையும் ஆய்வின் போது சேகரித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 13 லட்சம் தைவான் பெண்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது