நித்யானந்தா சாமியாரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அம்பலப்படுத்தியது
இதையடுத்து நித்யானந்தா தரப்பினர், அந்த வீடியோவில் இருப்பது நான் நித்யானந்தா அல்ல; செய்தியை தடை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தலைமைறைவான நித்யானந்தா தனது விளக்கத்தை சிடியில் பதிவு செய்து வெளியுலகிற்கு அனுப்பி வைத்தார். ‘’என் மீது சுமத்தப்பட்டுள்ளது வீண் பழிதான். இதை தகுந்த ஆதாரங்கள் மூலம் நீரூபிப்பேன். அது வரை பொறுத்திருங்கள். ஆதாரங்கள் கிடைத்ததும் உங்கள் முன் தோன்றுவேன்’’என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த வீடியோவை எடுத்த நித்யானந்தாவின் சீடர் லெனின் என்கிற நித்ய தர்மானந்தா, பேட்டியில் அந்த வீடியோவில் உள்ளது நித்யானந்தா -ரஞ்சிதாதான். இது போலி என்றால் நான் தூக்குதண்டனை ஏற்கவும் தயார் என்று உறுதியாக சொன்னார்.
இந்நிலையில் இரண்டு ஆங்கில சேனல்களுக்கு மட்டும் ரகசியமாக நித்யானந்தா அளித்த பேட்டியில், ‘’அந்த வீடியோவில் உள்ளது நானும் ரஞ்சிதாவும்தான்.
ஆனால் எனக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்தில் ரஞ்சிதா பணிவிடை செய்தார். அதை தவறாக சித்தரித்துவிட்டார்கள்.
அந்த வீடியோவில் பாதிதான் உண்மை. பாதி ஜோடிக்கப்பட்டுள்ளது.
மீத விவரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பெங்களூர் வருவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
முதலில் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று சொன்ன நித்யானந்தா இப்போது நான் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். பாதி போலி என்று சொல்வதும் உண்மைதான். அதையும் அவரே பிறகு ஒப்புக்கொள்வார்.
நித்யானந்தாவின் இந்த பேட்டியால் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களும், சீடர்களூம் வாய் திறக்க முடியாமல் இருக்கிறார்கள்