என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 15 மார்ச், 2010

பொன்சேகா ஜனாதிபதித் தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு தெளிவாகத் தெரிவதாக கூறுகிறார் வீரவன்ச!

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார சுலோகத்திற்கும் ஐ.நா.வால் தெரிவிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகளுக்குமிடையில் தொடர்பிருப்பது தெளிவாகத் தென்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது ஐ.ம.சு.கூ.வின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணித் தலைவரான வீரவன்ச,ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான குற்றச்சாட்டாக பொன்சேகாவின் தேர்தல் பிரசார சுலோகம் காணப்பட்டது.
இப்போது அதேவிதமான சுலோகங்களை தமது அறிக்கைகளில் ஐ.நா. மனித உரிமை அதிகாரிகள்சேர்த்துக்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
எதிரணி குழம்பிப்போயுள்ளது. அதனால் அரசாங்கம் தேர்தல் வன்முறைகளில் தஞ்சமடைந்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏப்ரல் 08 இல் இடம்பெறும் தேர்தலில் ஐ.தே.க. தோல்வியடைவது நிச்சயமாகும். அரசியல் வரலாற்றிலேயே ஆகக் குறைந்த வாக்குகளை ஐ.தே.க. பெற்று சாதனை புரிய உள்ளது என்றும் வீரவன்ச கூறியுள்ளார்.