சட்டத்திற்கு புறம்பாக தானோ தனது ஆசிரமமோ எதனையும் செய்துவிடவில்லை என்று நித்யானந்தா சாமி விளக்கம் அளிக்கின்ற வீடியோ ஒன்று இன்று வெளியானது. கைத்தொலைபேசி கமராவினால் எடுக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற இவ் வீடியோவில் நித்யானந்தா சாமி ஆங்கிலத்தில் பேசுகின்றார் தன்மீதும் தனது ஆசிரமம் மீதும் அண்மைக்காலத்தில் குற்றச்சாட்டுக்கள் வந்த போதும் பலரும் பல இடங்களில் இருந்தும் தங்களது ஆதரவைத் தனக்குத் தெரிவித்து வருவதாகவும் தன் மீதான குற்றச்சாட்டு அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் நித்யானந்தா அவ் வீடியோவில் தெரிவித்திருக்கின்றார்.
தான் சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்யவில்லை என்றும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் அனைத்து உண்மைகளும் வெளிவரும் எனவும் அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.