என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 20 மார்ச், 2010

சீனாவிலிருந்து கூகிள் ஏப்ரல் 10ஆம் திகதி வெளியேறுகிறது

சீன அரசு விதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பிரபல இணைய தேடுதள நிறுவனமான கூகுள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி சீனாவிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.சீனாவில் செயல்படும் கூகுள் நிறுவனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளதால் சீனாவில் தனது தொழில் சேவைகளை நிறுத்திவிட்டு 
 அங்கிருந்து வெளியேற கூகுள் தயாராகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.

கூகுளின் வெளியேற்றத்தினால் கணிசமான அந்நிய முதலீடு பாதிக்கப்படும் என்பதால், கூகுளை வெளியேறவிடவும் சீனாவுக்கு மனமில்லை.இந்நிலையில், சீனாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடந்தால் கூகுள் தொடர்ந்து சீனாவில் தனது தொழில் சேவைகளை தொடரலாம் என்று அந்நாட்டு அரசு சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.
ஆனால் சீனாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயபட விரும்பாத கூகுள், எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதியன்று சீனாவிலிருந்து வெளியேற தயாராகி வருவதாக ஷாங்காயிலிருந்து வெளியாகும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன