முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.
வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90 சதவீதமான மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23 ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்