என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 27 மார்ச், 2010

தொடர் தோல்விகளையும் சர்ச்சைகளையும் சந்திக்கும் பஞ்சாப் அணி

யுவராஜ் சிங் அடிக்கடி பொலிசுக்கு தெரியாமல் வெளியே சென்று விடுகிறார். ஒரு பொறுப்பான வீரராக அவர் நடந்து கொள்வது இல்லை. எங்களுக்கு இருக்கும் பிரச்சினையை அவர் புரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு விடயத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.யுவராஜ் சிங் செயல் குறித்து ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளதாக சண்டிகார் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

பலத்த பாதுக்கப்புக்களுக்கு மத்தியில் இடம் பெறும் ஐபிஎல் போட்டிகளில் நேற்று சண்டிகார் ஹொட்டலில் தங்கியிருந்த பஞ்சாப் அணி வீரர் யுவராஜ்சிங் நேற்று இரவு பாதுகாப்பு விதிகளை மீறி ஹொட்டலை விட்டு வெளியே சென்றதையடுத்தே அவர் மீதான புகார் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹொட்டலை விட்டு வெளியே செல்வதாக இருந்தால்அணி வீரர்கள் தமக்கென பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் அத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையோடு தான் வெளியே செல்ல வேண்டும் என்று கடப்பாடு உள்ளது. இவை எதையும் பின்பற்றாத யுவராஜ் நேற்று இரவு நேரத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் வெளியே சென்று விட்டு நீண்ட நேரத்துக்கு பின்னர் ஹொட்டலுக்கு திரும்பியுள்ளார். 

கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் பல்வேறு பாதுகாப்பு விதி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது. எனினும் இந்திய வீரர்கள் பலர் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக கடை பிடிப்பது இல்லை என்று ஏற்கனவே பல முறை புகார்கள் வந்துள்ளன. 

இதற்கிடையே பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாடியா பொது இடத்தில் புகை பிடித்ததற்காக சண்டிகார் போலீசார் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்