என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 20 மார்ச், 2010

தங்கச் சுரங்க‌த்த‌ி‌ல் ‌விப‌த்து: 200 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சியர்ரா ‌சியோ‌னி‌‌ல் உ‌ள்ள த‌ங்க‌ச் சுர‌ங்க‌த்த‌ி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌திடீ‌ர் ‌நில‌‌‌ச் ச‌ரிவ‌ி‌ல் சுமா‌ர் 200 தொ‌‌ழிலாள‌ர்‌க‌ள் ப‌லியானதாக அந்நாட்டின் இயற்கை வழங்க‌‌‌ல் துறை அமைச்சு தெரிவித்து‌ள்ளது.ஆப்பிரிக்க நாடான சியர்ரா ‌சியோன் தலைநகர் பிரீடவுனில் இருந்து 290 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அ‌ந்த ‌‌திடீ‌ர் ‌நில‌ச்ச‌ரி‌வி‌ல் த‌ங்க சுர‌ங்க‌த்‌தி‌ல் வேலை பார்த்த சுமா‌ர் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியானதாக அந்நாட்டின் இயற்கை வழங்க‌‌‌ல் துறை அமைச்சு தெரிவித்து‌ள்ளது.