கடந்த வாரத்தில் ஒருநாள்... எந்திரன் யூனிட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றிவிட்டு ரகசியமாக ஒரு காட்சியை படம் பிடித்தார் ஷங்கர்
வெளியேற்றப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லைட்மேன்கள் மட்டுமல்ல... முக்கிய அசிஸ்ட்டென்ட் டைரக்டர்களும், தொழில் நுட்ப உதவியாளர்களும் கூட அடக்கம் என்கிறார்கள். ஏதாவது படுக்கையறை சீன்கள் என்றால்தான் இப்படி கெட்டவுட் சொல்வார்கள் ஊழியர்களுக்கு. இந்தப்படத்தில் அப்படியா இருந்திருக்கும்? அதுதான் இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறாராம். இது க்ளைமாக்சா? அல்லது படத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய காட்சியா? எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் இப்படியொரு காட்சி எடுக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தாராம் ரஜினியும்.
எங்காவது ஸ்டுடியோக்களில் செட் போட்டு எடுத்தால் விஷயம் கசிந்துவிடும் என்பதால் சன் டி.வி ஸ்டுடியோவிலேயே இந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். ரஜினியின் இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் அவர் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. ஆச்சர்யம்தான்!