என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 22 மார்ச், 2010

இலங்கையர் ஒருவர் நான்கு வயது சிறுவனை ஆற்றில் வீசிய தாய்

நான்கு வயதுடைய அமிலா சாந்தறுவன் பெர்னாண்டோ என்ற 4வயது சிறுவனை தாயொருவர் களுகங்க ஆற்றில் வீசியுள்ளார். இவ் சிறுவனை லொறி சாரதியொருவர் காப்பாற்ற முனைந்தும் பலனிக்கவில்லை. மேற்படி ஆற்றில் சிறுவன் ஒருவன் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்ட லொறி சாரதி மேற்படி சிறுவனை காப்பாற்றி Lady Ridgeway Hospital சேர்த்தபோதும் மேற்படி சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லையென வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறுவனின் தாய் தெரிவிக்கையில், தனது கணவர் தமது குடும்பவாழ்வை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் சிறுவனை வளர்ப்பதற்கு தன்னிடம் வசதியில்லாத நிலையிலேயே இவ்வாறான துயர நிலையை தான் எடுக்கநேரிட்டதாக தெரிவித்துள்ளார். சிறுவனின் தாயார் வாழ்க்கை செலவுக்காக லோட்டரி ரிக்கற் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.